திராவிட மாடல் ஆட்சி: கைத்துப்பாக்கி கேட்கும் வி.ஏ.ஓ. சங்கம்!

திராவிட மாடல் ஆட்சி: கைத்துப்பாக்கி கேட்கும் வி.ஏ.ஓ. சங்கம்!

Share it if you like it

தங்களுக்கு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வி.ஏ.ஓ. சங்கம் கோரிக்கை விடுத்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சி அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. எனினும், மக்கள் விரும்பும் அரசாக இந்த ஆட்சி இல்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு என சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. அந்த வகையில், அரசு ஊழியர்கள் கூட இந்த ஆட்சியில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே வி.ஏ.ஓ. லூர்தூ பிரான்சிஸ் என்பவர் அண்மையில் சமூக விரோதிகளால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது, படுகொலை தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவும், தற்காப்பு பயிற்சி அளித்து கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

விடியல் ஆட்சியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை வி.ஏ.ஓக்கள் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it