அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பானது இளைஞர்களுக்கு தேசத்தின் மீதான பற்றினை அதிகரிக்க செய்கிறது. இந்நிலையில் ABVP தென் தமிழகதத்தின் மாநில இணை செயலாளர் J.D.விஜயராகவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
நமது பாரத தேசத்தில் 5 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கக்கூடிய மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய மக்கள் பிரதிநிதிகளுக்கான மக்களவை தேர்தல் இந்த வருடம் 7 கட்டங்களில் நடைபெற உள்ளது. நமது தமிழகத்தில் வரக்கூடிய ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. நமது ஜனநாயக நாட்டில் நமக்கு மிகவும் முக்கியமான ஜனநாயக கடமை தேர்தல் நேரத்தில் நமது விலைமதிப்பற்ற வாக்கினை செலுத்துதல். வலுவான அதிகாரம் பெற்ற தன்னிறைவு பெற்ற பாரதத்தை உருவாக்க கூடிய மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க நாம் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என ABVP தேசிய மாணவர் அமைப்பு சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இந்த வருட மக்களவை தேர்தலில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகவே இளம் வாக்காளர்கள் அனைவரும் நம்முடைய முதல் வாக்கினை NOTA-விற்கு செலுத்துவதை விடுத்து பாரத தேசத்திற்கு யார் நல்லது செய்வார்கள் என்றும் தேசத்தை உலக அளவில் யார் உயர்த்துவார்கள் என்றும் மக்களுக்காக சேவை பணிகளை உண்மையாக யார் செய்வார்கள் என்றும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு இளம் வாக்களரும் வாக்களிப்பதற்கு முன் NATION FIRST என்ற உணர்வோடு வாக்களிக்க வேண்டும். இளைஞர்களின் ஆற்றலை புரிந்துகொண்டு உழைக்கும் கைகளின் திறமையை அதிகரிக்க திட்டங்களை வகுத்து இளைஞர்களுக்கு நட்பான அரசு அமைய வேண்டும். நம் ஒவ்வொருவரின் வாக்கும் பாரதத்தின் பாதுகாப்புக்காகவும், அரசியலமைப்புக்காகவும், மிகவும் அவசியம் வாக்களிப்பது நமது உரிமை, அது மட்டுமல்ல அது நமது புனித கடமையும் கூட நம்முடன் நமது நண்பர்களையும் வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்வோம். எதிர்வரும் தேர்தலில் 100% வாக்களிக்க பாடுபடுவோம். தேசத்தை வழிநடத்திடுவோம். இச்செய்தியை தங்களது மேலான பத்திரிக்கையில் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.