பழங்குடியின மக்களின் நெகிழ்ச்சி: இதெல்லாம் திருமாவிற்கு புரியுமா?

பழங்குடியின மக்களின் நெகிழ்ச்சி: இதெல்லாம் திருமாவிற்கு புரியுமா?

Share it if you like it

திரெளபதி முர்மு-வின் வெற்றிக்காக பழங்குடியினத்தை சேர்ந்த கிராம மக்கள் பிரார்த்தனை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது எல்லாம், திருமாவிற்கு எங்கே? புரிய போகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக திரெளபதி முர்மு களம் இறக்கப்பட்டு இருக்கிறார். அதேவேளையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா முன் நிறுத்தப்பட்டு உள்ளார். அந்த வகையில், கடந்த 18.07.2022 அன்று ஜனாதிபதி தேர்தல் நடை பெற்றது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகள் 21.07.2022 நாளை வெளியாக இருக்கிறது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் எவ்வாறு இருக்கும் என, இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெற வேண்டி, பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த மக்கள், பிரார்த்தனை செய்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஒரு சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து, நாட்டின் மிக உயரிய பதவிக்கு ஒருவரால் வர முடியுமானால், அது பா.ஜ.க.வால் மட்டுமே சாத்தியம் என்பது மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகியுள்ளது. பட்டியல் சமூகத்தின், தலைவர்களாக தம்மை காட்டிக் கொள்ளும் திருமா, ஸ்டாலின் மற்றும் சில்லறை போராளிகளுக்கு இது எல்லாம் எங்கே? புரிய போகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it