போதையில் குத்தாட்டம் போட்ட திருமாவின் பிரதமர் வேட்பாளர்!

போதையில் குத்தாட்டம் போட்ட திருமாவின் பிரதமர் வேட்பாளர்!

Share it if you like it

திருமா முன்மொழிந்த பிரதமர் வேட்பாளர் சரக்கு அடித்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் சித்தராமையா. இவர், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர். இவர், முதல்வராக இருந்த சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பொதுமக்களிடம் அவப்பெயரை எடுத்த பெருமைக்கு உரியவர்.

இதனிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருது வழங்கும் விழா அவ்வபோது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரைக்கு ‘பெரியார் ஒளி’ விருது, வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசத்துக்கு ‘காமராஜர் கதிர்’ விருது, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சி. செல்லப்பனுக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது, எஸ்.டி.பி.ஐ தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவிக்கு ‘காயிதே மில்லத் பிறை’ விருது வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு வழங்கினார் திருமாவளவன்.

இதையடுத்து, பேசிய திருமாவளவன் வழக்கம் போல மத்திய அரசையும், பாரதப் பிரதமர் மோடியையும் கடுமையாக சாடி இருந்தார். மேலும், இந்தியாவின் அடுத்த பாரதப் பிரதமராக சித்தராமையா வர வேண்டும் என தனது விருப்பத்தை மேடையில் தெரிவித்து இருந்தார். இவரின், கருத்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தன.

பாரதப் பிரதமர் மோடியை வீழ்த்தும் சரியான ஆயுதம் ராகுல் காந்தி என இதுநாள் வரை கூறி வந்தவர் திருமாவளவன். ஆனால், விருது வழங்கும் நிகழ்ச்சியில் திடீர் என சித்தராமையாவை பிரதமர் வேட்பாளராக அவர் முன்மொழிந்த சம்பவம் கர்நாடகவையும் தாண்டி தமிழகம் முழுவதும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தன.

இப்படிப்பட்ட சூழலில் தான், வி.சி.க. தலைவர் திருமாவளவன் பிரதமர் வேட்பாளராக அறிவித்த சித்தராமையா மது குடிப்பது போன்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதன் லிங்க் இதோ.


Share it if you like it