எது தாழ்ந்த ஜாதி?…பெரியார் பல்கலை. சர்ச்சைக் கேள்வி!

எது தாழ்ந்த ஜாதி?…பெரியார் பல்கலை. சர்ச்சைக் கேள்வி!

Share it if you like it

பெரியார் பல்கலை கழகத்தில் நடைபெற்ற தேர்வில் தாழ்ந்த ஜாதி எது என்ற கேள்வி கேட்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திராவிட கழகத்தின் தலைவராக இருப்பவர் வீரமணி. இவர், மேடைகள் தோறும் சமூக நீதி, சுயமரியாதை, பெண் விடுதலை குறித்து பேசக் கூடியவர். இதுதவிர, ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை தொடர்ந்து அவமதிப்பதை கொள்கையாக கொண்டவர். மேலும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் பிரிவினைவாதிகள் செய்யும் தவறுகளை கண்டும், காணாமல் கடந்து செல்பவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது இன்று இருந்து வருகிறது.

அந்த வகையில், சேலம் பெரியார் பல்கலை கழகத்தில், அண்மையில் தேர்வு ஒன்று நடைபெற்று இருக்கிறது. இதில், குறிப்பிட்ட நான்கு ஜாதியின் பெயர்கள் மேற்கோள் காட்டப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இதில், எந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற கேள்வி கேட்கப்பட்ட சம்பவம் தான் பொதுமக்கள் மத்தியில் கடும் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு, பல சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் தனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அது குறித்தான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் என்ன தாழ்ந்த ஜாதியா? என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் முன்பு ஒருமுறை கூறி இருந்தார். இதனை தொடர்ந்து, தி.மு.க. மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி பட்டியல் சமூகத்திற்கு நாங்கள் போட்ட பிச்சை என அச்சமூகத்தை, இழிவுப்படுத்தி இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் தான், சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் நடைபெற்ற தேர்வில் எது தாழ்ந்த ஜாதி என்ற கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது.

அண்ணாமலை, பாரதப் பிரதமர் மோடி, என்றால் உடனே ஓடி வரும் வி.சி.க. தலைவர் திருமா சேலம் பெரியார் பல்கலை கழகத்திற்கு எதிராக இன்று வரை வாய் திறக்கவில்லை. அதே போல, திராவிடர் கழக தலைவர் வீரமணியும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it