ஏர் இந்தியா குண்டுவெடிப்பு: கனடாவில் மாலிக் சுட்டுக்கொலை!

ஏர் இந்தியா குண்டுவெடிப்பு: கனடாவில் மாலிக் சுட்டுக்கொலை!

Share it if you like it

ஏர் இந்தியா குண்டுவெடிப்பு குற்றவாளியான ரிபுதமன் சிங் மாலிக் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்தியாவுக்குச் சொந்தமான ‘ஏர் இந்தியா 182’ என்கிற விமானம், கனடாவின் மாண்ட்ரீல் நகரிலிருந்து லண்டன், டெல்லி வழியாக மும்பை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தது. இந்த விமானம் 1985-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி மாண்ட்ரீலில் இருந்து லண்டன் நோக்கிச் சென்றது. அயர்லாந்து நாட்டின் அட்லாண்டிக் கடலின் மீது 31,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்த விமானம், திடீரென வெடித்து சிதறியது. இதில், 86 குழந்தைகள் உட்பட விமானத்தில் இருந்த 329 பேரும் உயிரிழந்தனர். இவர்கள், இந்தியா, கனடா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். 1984-ம் ஆண்டு சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக கனடிய சீக்கிய போராளிகளால் இத்தீட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இந்த குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒரே நபர் ரிபுதமன் சிங் மாலிக் மட்டுமே. பொய்ச் சாட்சி அளித்ததற்காக 2010-ம் ஆண்டு அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், வழக்கு விசாரணையின்போது 2016-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இவர்தான் நேற்று கனடாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். விடுதலைக்குப் பிறகு வான்கூவர் பகுதியில் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று காலை 9.30 மணியளவில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், மருத்துவர்கள் வரும்வரை முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ரிபுதமன் சிங் மாலிக் உயிரிழந்தார். தொழில் போட்டியில் கொல்லப்பட்டரா அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத செயல்களால் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கத்தி எடுத்தவனுக்கு கத்தியிலதான் சாவுன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க!


Share it if you like it