வி.சி.க தலைவர் திருமாவளவன் திருவள்ளுவர் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் எம்.பியும் வி.சி.க தலைவருமான திருமாவளன் தொடர்ந்து ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களின் உணர்வுகளையும், அவர்களின் பண்பாடு, வழிபாட்டுமுறை, கலாச்சாரம், போன்றவற்றை கேலி, கிண்டல் செய்வது, மிக கடுமையாக விமர்சனம் செய்வது, என தொடர்ந்து தனது வன்மம் நிறைந்த கருத்துக்களை இன்று வரை வெளிப்படுத்தி வருகிறார் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.
சமீபத்தில் திருக்குறள் பற்றிய புரட்சி நூல்’ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது. உண்மைக்கு புறம்பான பல கருத்துக்களை திரித்தும், ஈசன் தான் ஏசு பிரான் என்றும் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றுவர் என திருமா பேசி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது, ஏசு பிறந்த ஆண்டு எது, அரசியல் ஆதாயத்திற்காக தனது மனம் போன போக்கில் பேசி அப்பாவி ஹிந்துக்களை மதம் மாற்றும் வேலையை தான் திருமாவளன் செய்து வருகிறார் என்று பலர் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றனர்.
- அருணன் பாராட்டிய சீமான் தமிழ் கடவுள் முருகனை மதம் மாற்றிய சம்பவம்.
- ஒளவையாரை தி.மு.க எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா இஸ்லாத்திற்கு மதம் மாற்றிய சம்பவம்.
- திருவள்ளுவரை கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றிய சம்பவம் என தொடர்ந்து ஹிந்து மதத்தின் மீது தொடர் தாக்குதல் நிகழ்வது கடும் கண்டனத்திற்குறியது ஆகும்.