தீண்டாமை பாலம் கட்டிய திருமா – தொண்டர்கள் இழுக்க காரில் தாவிய கூத்து.!

தீண்டாமை பாலம் கட்டிய திருமா – தொண்டர்கள் இழுக்க காரில் தாவிய கூத்து.!

Share it if you like it

மழை நீரில் கால் வைக்க தயங்கிய வி.சி.க தலைவர் திருமா.

பழவேற்காட்டில் ஆய்வு ஒன்றிற்காக சமீபத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்று இருந்தார். கடல் நீரில் கால் வைக்க தயங்கிய அமைச்சரை மீனவர் ஒருவர் தனது தோலில் தூக்கி சுமந்த சென்று காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. கடல் நீரில் கால் வைக்கவே தயங்கும் இவர் எப்படி? மீனவர்களின் கண்ணீரையும், உணர்வுகளையும், புரிந்து கொள்வார் என அந்நாட்களில் எதிர்க்கட்சிகள் மிக கடுமையாக அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

சமூக நீதி, சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, சகோதரத்துவம், என்று ஊருக்கு உபதேசம் செய்து வரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்களின் கால் மழை நீரில் படாமல் இருக்க, நான்கு பேர் சேரில் பாலம் அமைத்து இழுத்து சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழை நீரில் கால் வைக்க தயங்கும் இவர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் எப்படி? நடந்து கொள்வார். இது போன்று வேறு யாரேனும் செய்து இருந்தால், உண்மை வெளி வருவதற்கு முன்பே பா.ஜ.க, ஆதிக்க சக்தி, மோடியின் மீது பழியை போட்டு இந்நேரம் இதனை அரசியல் ஆக்கி இருப்பார் திருமா என சமூக வலைத்தளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it