திருமண வயதை உயர்த்தியதற்கு பெண்கள் வரவேற்பு – திருமாளவன் கடும் எதிர்ப்பு..!

திருமண வயதை உயர்த்தியதற்கு பெண்கள் வரவேற்பு – திருமாளவன் கடும் எதிர்ப்பு..!

Share it if you like it

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்திய மத்திய அரசின் முடிவுக்கு இஸ்லாமிய அமைப்புகள், திருமாவளவன் கடும் எதிர்ப்பு.

பெண்களின் உடல் நலம், மன நலம், ஊட்டச்சத்து குறைபாடு, இளம் வயதில் மரணம், பெண் கல்வி, பொருளாதாரம், போன்றவற்றை கருத்தில் கொண்டும், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், என பல்வேறு தரப்புகளிடம் இருந்து கிடைத்த ஆலோசனைகளின் அடிப்படையில் மத்திய அரசு 18 வயதில் இருந்த பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த முடிவு செய்தது.

மத்திய அரசின் இம்முடிவிற்கு பெற்றோர்கள், இளம் பெண்கள், உட்பட பலர் தங்களது ஆதரவினை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். கேரளாவை சேர்ந்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்பி அப்துல் வஹாப் மற்றும் இந்திய தேசிய லீக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தடா ஜெ ரஹிம் தங்களது கடும் எதிர்ப்பினை சமீபத்தில் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், வி.சி.க கட்சியின் தலைவருமான திருமாவளன் அவர்கள் திருமண வயது திருத்த மசோதா சட்டத்திற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்து டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டு உள்ளார். பெண்களே வரவேற்பு அளிக்கும் பொழுது இவர் ஏன்? எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it