திருமாவிற்கு பேண்டேஜ்: பறையர் பேரியக்கம் அதிரடி அறிவிப்பு!

திருமாவிற்கு பேண்டேஜ்: பறையர் பேரியக்கம் அதிரடி அறிவிப்பு!

Share it if you like it

வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு பறையர் பேரியக்கம் எச்சரிக்கை.

தி.மு.க. ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றியோ, அட்டூழியங்கள் பற்றியோ இன்று வரை திருமாவளவன் வாய் திறப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்தவகையில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ரம்யா-22 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். இவரை தான், தி.மு.க.வை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட எட்டு பேர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தனர். தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. ஆனால், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன் இன்று வரை இது குறித்து பேசவில்லை.

இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை, சாதியை சொல்லி முன்பு போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜகணப்பன் திட்டினார். இதற்கு, பட்டியல் சமூகத்தை சேர்ந்த பல தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். என்னை 5 முறைக்கு மேல் நீ எஸ்.சி பிரிவை சேர்ந்தவர் என்பதை சுட்டிக்காட்டினார். என்னை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். எஸ்.சி என்பதை சுட்டிக்காட்டினார். என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு, மனக்காயத்தை நான் அடைந்தது இல்லை என வேதனையுடன் ராஜேந்திரன் பேசி இருந்தார். இதற்கும், தோழர் திருமாவளவன் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைதொடர்ந்து, செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கி வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர் அவர்களே என அழைக்க வைத்து திராவிட புரட்சியை செய்தவர் ஸ்டாலின் என திண்டுக்கல் ஐ.லியோனி பேசியிருந்தார். இதற்கும், திருமாவளவன் வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் தான், பட்டியல் சமூகத்தை இழிவாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அவரின் வீட்டின் மீது பிஞ்ச செருப்பு வீசும் போராட்டம் தொடரும் எனவும். தி.மு.க.வின் தீண்டாமைக்கு எதிராக வாய் திறக்காத திருமாவளவனுக்கு பேண்டேஜ் அனுப்புவோம் என பறையர் பேரியக்கம் கடும் எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it