பலான வீடியோவில் சிக்கிய பாதிரியார் என்பது அம்பலமாகி இருக்கிறது. அவரை வேறு சர்ச்சுக்கு அதிரடியாக மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் பிஷப்.
தூத்துக்குடி மாவட்டம் தக்கலை அருகே உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்தவர் பெனடிக்ட் ஆன்ட்ரோ. இவர், சர்ச்சுக்கு வருபவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கி வந்தார். இப்படி பாவமன்னிப்புக் கேட்டு வரும் பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, சில்மிஷம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இப்படி பாவமன்னிப்புக் கேட்டு வந்த கல்லூரி மாணவி ஒருவரிடம், பாதிரியார் பெனடிக்ட் தனது லீலைகளை காட்டி இருக்கிறார். மேலும், அந்த மாணவியின் ரகசியத்தை வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டி, அப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்து வந்திருக்கிறார்.
பாதிரியாரின் அத்துமீறல்கள் எல்லைமீறிப் போகவே, இந்த விஷயத்தை தனது நண்பரும் சட்டக் கல்லூரி மாணவருமான ஆஸ்டின் ஜியோவிடம் சொல்லி இருக்கிறார் அந்த மாணவி. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவாலயத்துக்கு வந்த ஆஸ்டின் ஜியோ உள்ளிட்ட சிலர், பாதிரியார் பெனடிக்ட்டை தாக்கி, அவரது லேப்டாப்பையும் பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக பாதிரியாரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பிலாவிளை சட்டக்கல்லுாரி மாணவர் ஆஸ்டின் ஜியோ கைது செய்யப்பட்டார். இதனிடையே, பாவமன்னிப்பு பாதிரியார் பெனடிக்ட், ஒரு மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் பலான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து, பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோவை வேறு சர்ச்சுக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது பிஷப் அலுவலகம். அதேசமயம், மாணவர் ஆஸ்டின் ஜியோவின் தாயார் தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகாரை கொடுத்திருக்கிறார். அப்புகாரில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோ, இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அப்பெண் தற்கொலை முடிவில் இருப்பதாகவும், இதை தட்டிக்கேட்ட தனது மகன் ஆஸ்டின் ஜியோ மீது பொய் புகார் கொடுத்து கைது செய்ய வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே, இந்த விவகாரத்தில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோவை போலீஸார் கைது செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆகவே, இதிலிருந்து தப்பிக்க பாதிரியார் பெனடிக்ட் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறப்படுகிறது.