‘ஏலே, நீ அந்த வீட்டுக்குள்ள படுத்துக் கிடந்தியல்ல’… பாதிரியாரை கிடுகிடுக்க வைத்த சி.எஸ்.ஐ. நிர்வாகிகள்!

‘ஏலே, நீ அந்த வீட்டுக்குள்ள படுத்துக் கிடந்தியல்ல’… பாதிரியாரை கிடுகிடுக்க வைத்த சி.எஸ்.ஐ. நிர்வாகிகள்!

Share it if you like it

தூத்துக்குடி சி.எஸ்.ஐ. தேவாலய வளாகத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில், பாதிரியாரின் லீலைகள் அம்பலமாகி இருக்கிறது. மேலும், பாதிரியார் மீது பாலியல் புகார் கூறிய தரப்பு, அவரை சிறைப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தென்னிந்திய திருச்சபையின் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் லே செயலாளராக இருந்தவர் எஸ்.டி.கே.ராஜன். இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்ததால் திருச்சபை மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். எனவே, 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் அணியை எதிர்த்து டி.எஸ்.எஃப். அணி களமிறங்கியது. இதில், டி.எஸ்.எஃப். அணி வெற்றிபெற்றது. புதிய லே செயலாளராக நீகர் பிரின்ஸ் கிப்ஸன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பிறகு, டி.எஸ்.எஃப். அணியினர் ஒரு பிரிவாகவும், எஸ்.டி.கே.ராஜன் கோஷ்டி மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி நாசரேத் திருமண்டத்தின் பெருமன்ற உறுப்பினர்களாக இருக்கும் எஸ்.டி.கே.ராஜன் தரப்பினரை, திருமண்டலத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதற்கான முயற்சிகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, கிப்ஸன் தரப்புக்கு ஆதரவாக பாதிரியார் செல்வின்துரை செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சூழலில், பாதிரியார் செல்வின்துரை, பரிபேதுரு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் ரகசிய கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகின்றது. இக்கூட்டத்தில், எஸ்.டி.கே.ராஜன் அணியினரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, பரிபேதுரு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் திரண்ட எஸ்.டி.கே.ராஜன் ஆதரவாளர்கள், பாதிரியார் செல்வின்துரையை மறித்து கூட்டம் நடத்தவிடாமல் விரட்டினர். மேலும், பாதிரியார் செல்வின்துரையைப் பார்த்து, ஏலே, சண்முகபுரத்துல அந்த வீட்டுக்குள்ள நீ படுத்துக் கிடந்தல்ல என்று எஸ்.டி.கே.ராஜன் தரப்பினர் பாலியல் புகார்களை தெரிவித்ததால், பாதிரியார் ஆடிப்போய் விட்டார். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. எனவே, பாதிரியார் செல்வின்துரை, தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முயன்றார்.

ஆனால், அவரை வெளியே செல்ல விடாமல் தடுத்து, சாவியை பறித்து வைத்துக் கொண்டனர் எஸ்.டி.கே.ராஜன் தரப்பினர். இதனால், பாதிரியார் மிரண்டு போன பாதிரியார் மீண்டும் அவரது அறைக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் பிறகு, அங்கு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். ஆனாலும், போலீஸார் முன்னிலையிலேயே இரு தரப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர், போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட ரகசிய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம், பாதிரியார் மீது பாலியல் புகார் சுமத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it