சீமான் பாட்டி ‘ஜாக்கெட்’ போட்ட ரகசியம் தெரியுமா…? தி.மு.க. ஆபாச பேச்சாளரின் அருவெறுப்பு பேச்சு!

சீமான் பாட்டி ‘ஜாக்கெட்’ போட்ட ரகசியம் தெரியுமா…? தி.மு.க. ஆபாச பேச்சாளரின் அருவெறுப்பு பேச்சு!

Share it if you like it

தி.மு.க.வைச் சேர்ந்த ஆபாச பேச்சாளர் ஆர்.எஸ்.பாரதி, பெண் நிர்வாகிகள் முன்னிலையில் ஜாக்கெட் பற்றி பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சியில் பொதுக்கூட்டம் நடந்தது. கோவில்பட்டி மத்திய, தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில், பெண் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய தி.மு.க.வின் ஆபாச பேச்சாளர் ஆர்.எஸ்.பாரதி, “சீமான் பாட்டி ஜாக்கெட் போடாமல்தான் இருந்தார். அவர் ஜாக்கெட் போடுவதற்கு காரணமே திராவிட இயக்கம்தான்” என்று ஆபாசமாகப் பேசியிருக்கிறார்.

இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் பெண்கள் முன்னிலையில் எப்படிதான் இப்படி பேச முடிகிறதோ தெரியவில்லை. பெண்ணுரிமை பற்றி வாய்கிழிய பேசும் தி.மு.க.வினர், பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதான் என்று கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.


Share it if you like it