செருப்புக் காலுடன் பொங்கல் வைத்தாரா?  கனிமொழியை கோர்த்து விட்ட கீதா ஜீவன்!

செருப்புக் காலுடன் பொங்கல் வைத்தாரா? கனிமொழியை கோர்த்து விட்ட கீதா ஜீவன்!

Share it if you like it

தூத்துக்குடியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, செருப்புக் காலுடன் பொங்கல் வைத்ததாக புதிய சர்ச்சை வெடித்திருக்கிறது. காரணம், இவ்விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கீதா ஜீவன், செருப்புக் காலுடன் பொங்கல் வைக்கும் காட்சிகள் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கடந்த 9-ம் தேதி மாலை தூத்துக்குடி திரேஸ்புரம் பாக்கியநாதன்விளையில் நடந்தது. விழாவுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ. சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொங்கலிட்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 15 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.

இவ்விழாவில் பேசிய கனிமொழி, “தமிழக கவர்னர் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிட்டு வருகிறார். உதாரணமாக, நம்முடைய அடையாளங்கள், நமது பெருமைகள், கலாசாரம், பண்பாடு, நம்முடைய வரலாறு ஆகியவற்றில் மூக்கை நுழைக்கத் தொடங்கி இருக்கிறார். இந்த காலகட்டத்தில் நாம் பெருமையாக, தமிழர்களாக, தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக கொண்டாடக்கூடிய நிகழ்வு பொங்கல் திருவிழா. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இந்த பொங்கல் நேரத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய சூளுரை ஒன்று இருக்கிறது. அதாவது, நாம் நம்முடைய அடையாளங்களை, தமிழ்நாட்டை, தமிழ் மொழியை, பெருமையை, நமக்கென்று இருக்க கூடிய தனித்திறமையை, நம்முடைய வரலாற்றின் அடிகளை பாதுகாப்போம் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

ஆனால், இவ்வளவும் பேசிய கனிமொழி தமிழ் கலாசாரத்தை மட்டும் காக்க மறந்து விட்டார் என்பதுதான் உண்மை. அதாவது, பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் புனிதமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, சூரியனை வழிபட்டு, புத்தாடை உடுத்தி, பொங்கல் வைத்து, கடவுளுக்கு படைத்துவிட்டு, பின்னர் உணவு அருந்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இதுபோன்று தாங்கள் தெய்வமாக வழிபடும் விவசாய நிலங்களை கடவுளுக்குச் சமமாக மதித்து வெறும் காலுடன் பொங்கல் சமைத்து கடவுளுக்கு படைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பண்டிகையை அவமதிக்கும் வகையில், செருப்பு அணிந்து கொண்டு கனிமொழி பொங்கல் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. காரணம், விழாவில் பங்கேற்ற அமைச்சர் கீதா ஜீவன், செருப்புக் காலுடன் பொங்கல் வைக்கும் காணொளி தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த காணொளியில் கீதா ஜீவன் செருப்புக் காலுடன் நிற்பது தெள்ளத்தெளிவாக பதிவாக இருக்கிறது. அதேசமயம், கனிமொழியின் கால்கள் முழுவதுமாகத் தெரியாமல் புடவை மறைத்துக் கொண்டு இருக்கிறது. எனினும், கனிமொழியும் செருப்புக் காலுடன்தான் பொங்கல் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதுதான் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it