காரல் மார்க்ஸை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது: மீண்டும் சீண்டிய தமிழக கவர்னர்!

காரல் மார்க்ஸை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது: மீண்டும் சீண்டிய தமிழக கவர்னர்!

Share it if you like it

காரல் மார்க்ஸை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறி, மீண்டும் சீண்டி இருக்கிறார்.

பா.ஜ.க.வின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபத்தியாயா குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரிலுள்ள பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இவ்விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, ”ஒவ்வொரு தனி மனிதர்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டியதுதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், சமுதாயத்தில் தனி மனித வளர்ச்சி என்பது நிறைய பிரச்னைகளை உருவாக்கும். ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்தால்தான் நீர் உருவாகும். உலகத்தில்  ஒவ்வொருவரையும் தனித்தனியாக பார்ப்பதால்தான் இடையூறு ஏற்படுகிறது.

காரல் மார்க்ஸ் குடும்பமாக இருப்பதிலும் சமூகமாக இருப்பதிலும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. தனிமனித வளர்ச்சியில்தான் நம்பிக்கை கொண்டிருந்தார். ஏனெனில், தனிமனித வளர்ச்சியை குடும்பம் தடுக்கும் என்று நம்பினார். இது, வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. இதை நினைக்கும்போது எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது. இதை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் வேண்டுமானால் சிறந்த யோசனையை போல தோன்றலாம். ஆனால், அது யதார்த்தம் கிடையாது. உண்மையில் சொல்லப்போனால், குடும்பம்தான் ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். ஒருவரை சாதிக்க வைப்பதும், சமூகத்தில் சிறந்த மனிதராக மாற்றுவதும் குடும்பம்தான்” என்றார்.

ஏற்கெனவே, ஒரு நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ரவி, “மார்க்ஸின் சித்தாந்தமானது இல்லாதவர்கள் மேலே வர வேண்டும் என்கிறது. இது பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே மோதலை உருவாக்குகிறது. இது சமூகத்தில் பிளவையும், மோதலையும் உருவாக்குகிறது” என்று கூறியிருந்தார். இக்கருத்துக்கு இடதுசாரி தலைவர்கள் மட்டுமல்லாமல் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில், காரல் மார்க்ஸ் பற்றி மீண்டும் சீண்டி இருக்கிறார் கவர்னர் ரவி.


Share it if you like it