பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பிரபல திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்திரன் ஹிந்தியில் பாடி பதில் அளித்த காணொளி வைரலாகி வருகிறது.
தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஹிந்தி மொழிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மேலும், ஹிந்தி பேசும் மக்களின் உணர்வுகளை இன்று வரை காயப்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஹிந்தி படித்தால் பானிப்பூரி தான் விற்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியிருந்தது.
இதனிடையே, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் ஆதரவாளர்கள் ’ஹிந்தி தெரியாது போடா’ எனும் டீ சர்ட்டை அணிந்து கொண்டு அம்மொழி பேசும் மக்களை அவமதிப்பு செய்து இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், திரைப்பட இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் மற்றும் ஒலிப்பதிவாளர் எனும் பன்முகதன்மை கொண்டவர் டி. ராஜேந்திரன். இவர், தாம் இசையமைத்து பாடிய பாடல்கள் அனைத்தையும் தொகுத்து டி. ஆர். ஆர். ரெக்கார்ட்ஸ் எனும் பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
இப்பாடல்கள், அனைத்து மொழிகளிலும் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது நண்பர்களுடன் பத்திரிகையாளர்களை டி. ராஜேந்திரன் சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் வழக்கம் போல ஹிந்தி மொழிக்கு எதிரான கேள்வியினை அவர் முன்வைத்தனர். இதற்கு, டி.ஆர். ஹிந்தி மொழியில் பாடல் பாடி தனது பதிலை கேள்வி கேட்ட நெறியாளருக்கும், பட்டத்து இளவரசர் உதயநிதிக்கும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.