கோயில் திருப்பணிக்கு லஞ்சம்… இதுதான் திராவிட மாடலோ!

கோயில் திருப்பணிக்கு லஞ்சம்… இதுதான் திராவிட மாடலோ!

Share it if you like it

கோயில் திருப்பணிக்கு ஆய்வறிக்கை வழங்க 5 லட்சம் ரூபாய் கேட்ட தொல்லியல் துறை பெண் வல்லுனர் குழு உறுப்பினரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் அமைந்திருக்கிறது பிரசித்தி பெற்ற குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில். இக்கோயிலின் பரம்பரை நிர்வாகியாக இருந்து வருபவர் குணசீலத்தைச் சேர்ந்த பிச்சுமணி. இவர், உபயதாரர்கள் மூலம் இக்கோயிலுக்கு திருப்பணி வேலைகளை செய்ய முடிவு செய்தார். இதற்காக, ஹிந்து சமய அறநிலையத் துறையில் முறையாக அனுமதியும் பெற்றார். ஆனால், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தொல்லியல் துறை வல்லுனர் குழுவிடம் ஆய்வறிக்கை பெறவேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஆகவே, அக்கமிட்டியின் ஆய்வறிக்கை வேண்டி, கோயில் நிர்வாகத்தினர் விண்ணப்பித்தினர்.

இதையடுத்து, கடந்த 2.6.2022-ம் தேதி தொல்லியல் துறை வல்லுனர் குழு கோயிலில் ஆய்வு செய்தது. ஆனால், பல மாதங்களாகியும் ஆய்வறிக்கையை வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகத்தினர் வல்லுனர் குழுவை தொடர்பு கொண்டு அறிக்கையை கேட்டிருக்கிறார்கள். பின்னர், குழு உறுப்பினரான தொல்லியல் துறை பெண் வல்லுனர் மூர்த்தீஸ்வரி, கடந்த 12.10.2022-ம் தேதி கோயிலுக்கு வந்து டிரஸ்டியை சந்தித்து 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், ஆய்வறிக்கை வழங்கப்படும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதற்கு, உபயதாரர்களிடம் அவ்வளவு தொகை கேட்க முடியாது என்று பிச்சுமணி கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாயாவது கொடுத்தால்தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்றும், முன்பணமாக 1 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும் மூர்த்தீஸ்வரி கேட்டிருக்கிறார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி, இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. மணிகண்டனிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்த ஆலோசனைப்படி, மூர்த்தீஸ்வரியிடம் 1 லட்சம் ரூபாயை பிச்சுமணி கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக மூர்த்தீஸ்வரியை பிடித்தனர்.

பின்னர், மூர்த்தீஸ்வரியின் காரை சோதனை செய்தபோது, அதில் கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் இருந்ததையும் போலீஸார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, மூர்த்தீஸ்வரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், அவரை சிறையில் அடைத்தனர். இதன் பிறகு, லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய விசாரணையில், லஞ்சம் கொடுக்காததால் தொல்லியல் துறை வல்லுனர் குழுவினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல், தமிழகத்தில் பல கோயில்களில் திருப்பணி நடைபெறாமல் இருப்பது தெரியவந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it