அண்ணாமலை கூறிய ஊழல் குறித்த கேள்விக்கு பதிலளிக்கத் தயங்கிய தி.மு.க. அமைச்சர் கே.என்.நேரு, இதெல்லாம் செய்தியா போடாதீங்க என்று ஜகா வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் எதிர்வரும் 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்கிற பெயரில் முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி நடைபெறவிருக்கிறது. இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திருச்சி தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். இத்திடலை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேருவிடம், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பதில் எழுப்பினார்கள்.
அப்போது, “எனக்கு மருத்துவமனை, கல்லூரி இருப்பதாக அண்ணாமலை கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, எனக்கு அந்த மருத்துவமனையை வாங்கி தாருங்கள். அதை 7 மருத்துவர்கள் நடத்துகிறார்கள். கட்சி நடத்துவதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை வேண்டுமென்றால் எங்கள் மீது வழக்குத் தொடரட்டும். அதை சந்திக்க நாங்கள் தயார்” என்று கூறியவர், திடீரென சுதாரித்து இதையெல்லாம் நீங்கள் செய்தியாகப் போடாதீர்கள். என் வாயை வைத்தே ஏதாவது சொல்ல வைத்து விடுவீர்கள். ஆகவே, இதை இத்துடன் முடித்துக் கொள்வோம் என்று கூறிவிட்டு எஸ்கேப்பாகி விட்டார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் அண்ணாமலையைக் கண்டு தி.மு.க.வினர் தெறிந்து ஓடுகிறார்கள் என்று கிண்டலடித்து வருகின்றனர்.