திரு.வி.க. வாழ்க்கை வரலாறு | Freedom 75 | சுதந்திரம் 75

திரு.வி.க. வாழ்க்கை வரலாறு | Freedom 75 | சுதந்திரம் 75

Share it if you like it

  • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, துள்ளம் என்ற ஊரில், விருத்தாசல முதலியார்- சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக (திரு.வி.க.) திருவாரூர் விருத்தாசல கல்யாணசுந்தரனார், ஆகஸ்ட் மாதம் 26 ஆம் நாள், 1883 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப் பயிற்சியும் பெற்றவர்.
  • தொடக்கத்தில், தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னை ராயப்பேட்டையில் தங்கி, தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார்.
  • படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார்.
  • 1906-ம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கராகச் சேர்ந்தார்.
  • பின்னர், 1909-ல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது அவருக்குத் திருமணம் நடந்தது.
  • 1916 -1917 வரை, ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்தார்.
  • 1918 ஆம் ஆண்டு, தொழிலாளர்கள் உரிமைக்காக போராட தொடங்கினார்.
  • தென் இந்தியாவின் முதல் தொழிலாளர் நல சங்கத்தைத் துவக்கினார்.
  • “தேசபக்தன்” என்ற பத்திரிகையில், அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
  • 1920 ஆம் ஆண்டு “நவசக்தி” என்ற தமிழ் வார இதழைத் தொடங்கி, ஆசிரியராக இருந்து, நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.
  • தமிழ் இலக்கியங்களைப் பற்றி வாரம் தோறும் “நவசக்தி” வார இதழில் தொடராக எழுதினார்.
  • இராமலிங்க அடிகளாரை பற்றி நிறைய புத்தகங்களை இயற்றினார்.
  • “மனித வாழ்க்கையும் காந்தியும்”, “பெண்ணின் பெருமை” என 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டார்.
  • தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்.
  • சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டு, பல நூல்களை எழுதி உள்ளார்.
  • திருக்குறள், பெரிய புராணம் குறித்து நிறைய உரைகளை இயற்றி உள்ளார்.
  • தமிழக காங்கிரஸின் தூண்களில் இவரும் ஒருவர்.
  • 1926 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தார். அப்போது நாடெங்கிலும் சுற்றுப்பயணம் செய்து, தமிழக மக்களுக்கு, சுதந்திர வேட்கையை ஊட்டினார்.
  • நாடு விடுதலை அடையும் வரை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • தன்னுடைய 71 ஆம் வயதில், 1953 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 அன்று, இறைவனடி சேர்ந்தார்.

Share it if you like it