ட்விட்டரில் பணிபுரியும் முன்னாள் ஊழியரின் பகீர் வாக்குமூலம்
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் சில வாரங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்க போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் மத்தியில் இச்செய்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு காரணம் என்னவென்றால், ஆரம்ப காலத்தில் அவர் ஒரு கம்யூனிஸ்ட் சிந்தனையாளராக இருந்துள்ளார். இதையடுத்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கருதிய அவர், சிறிய தொழில் ஒன்றினை துவங்கி இன்று உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
இதையடுத்து, விஞ்ஞானம், ஸ்பேஸ் உள்ளிட்ட துறைகள் மற்றும் ஜெட், ராக்கெட் என அடுத்தடுத்த துறைகளில் தனது பார்வையை திருப்பினார். அதில், கிடைத்த அனுபவத்தை கொண்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை உருவாக்கி இன்று தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளார் என்பதே நிதர்சனம். இதனை தொடர்ந்து, டெஸ்லா கார் நிறுவனத்தை தொடங்கி பேட்டரி கார், ஆள் இல்லாமல் தானாக இயங்கக்கூடிய கார் என அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார். அந்தவகையில், இன்று உலக பணக்காரர் பட்டியலில் எலன் மஸ்க்கும் ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்நிலையில், கம்யூனிஸ்ட் நாடுகள் மற்றும் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் பெரும் பணக்காரனாக மாறியுள்ள எலன் மஸ்கை அனுகி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் தொகையை தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு, அவர் பணம் தர மறுத்ததோடு தோழர்களை அவமதித்தாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத தோழர்கள் எலன் மஸ்கை தங்களின் பரம எதிரியாக பார்க்க துவங்கியுள்ளனர். இதையடுத்து, கம்யூனிஸ்ட் நாடுகளும், அக்கட்சியின் தோழர்களும் அவருக்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்திகளை இன்று வரை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் தான், ட்விட்டர் நிறுவனத்தை எலன் வாங்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுநாள் வரை இடது சாரி சிந்தனையாளர்கள் பிடியில் இருந்து வந்த ட்விட்டர் மற்றொருவரின் கைமாறும் செய்தி அங்குள்ள பணியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சீனியர் என்ஜினியர் ஒருவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அக்காணொளியில் அவர் கூறியிருப்பதாவது;
ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் இடது சாரி சிந்தனை கொண்ட ஊழியர்களுக்கு இது மகிழ்ச்சியை தரவில்லை. அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, தேசிய கருத்துக்களை பகிரும் நபர்களை தாங்கள் கூர்ந்து கவனிப்பதாகவும், அதேவேளையில், அவர்களை வளர விடாமல் இருப்பதற்கான பணிகளை செய்து வருகிறோம் என்று பகீர் தகவலை தெரிவித்துள்ளார். இதுநாள் வரை, மத்திய அரசு, பா.ஜ.க, மோடி எதிர்ப்பு மற்றும் ஹிந்து வெறுப்பை பரப்பி வந்த ட்விட்டர் நிறுவனத்திற்கு தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பலமான முட்டு கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.