சமீபத்தில் சமூக வலைத்தளங்களுக்கான புதிய சட்ட விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. இதனை ஏற்கமறுத்த டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் அராஜக போக்கை கையில் எடுத்தன. அதில் குறிப்பாக டுவிட்டர் நிறுவனம் எல்லை மீறி சென்று நமது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மாபெரும் தன்னார்வ தொண்டு அமைப்பான RSS தலைவர் திரு.மோகன் பகவத், மற்றும் அவ்வமைப்பை சேர்ந்த திரு.சுரேஷ் ஜோஷி, திரு.அருண் குமார், திரு.கிருஷ்ண கோபால் போன்ற பலருக்கு தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்த ப்ளூ டிக்கை நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக டுவிட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில் கடந்த 6 மாதமாக எந்த பதிவும் இடாததால் ப்ளூ டிக் நீக்கப்பட்டதாக கூறி இருந்தனர் ஆனால் கடந்த நவம்பர் மாதமே இறந்துபோன காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அஹமது படேலின் ப்ளூ டிக் இதுவரை நீக்கப்படாமல் இருப்பது. இவ்விவகாரத்தின் பின்னணியில் ஏதோ உள்நோக்கம் இருப்பதை உணர்த்துகிறது.
https://twitter.com/ahmedpatel?s=20
எந்த சமூகவலைத்தள செயலிகளை பதிவிறக்கம் செய்தாலும் terms & conditions ஏற்று கொண்டால் மட்டுமே நாம் அந்த செயலியை பயன்படுத்த முடியும் ஆனால் அந்த செயலிகளுக்கே terms & conditions யை இந்திய அரசு வகுத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அராஜக போக்கை கடைபிடிப்பது நாடுமுழுவதும் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.