உதயநிதியையும், மாமன்னன் திரைப்படத்தையும் கலாய்த்து முரட்டு உ.பி. முத்துவேல் வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முரட்டு உ.பி. முத்துவேல் என்கிற பெயரில், தி.மு.க.வுக்கு ஆதரவாக பேசுவதுபோல நக்கல் செய்து அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இவர் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, நெஞ்சுவலி என்று கூறி ஆஸ்பத்திரியில் அட்மிட்டானபோது மற்றொரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ எதிர்க்கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமான நபராக மாறினார் முரட்டு உ.பி. முத்துவேல்.
இந்த நிலையில்தான், உதயநிதியையும், அவர் நடித்த கடைசி படமான மாமன்னன் திரைப்படத்தையும் கிண்டல் செய்து புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். மாமன்னன் படம்தான் எனது கடைசிப் படம் என்று உதயநிதி கூறியிருந்த நிலையில், இந்த வீடியோவில், ப்ளீஸ் உங்க முடிவை மாத்திக்கங்க தலைவரே என்று கெஞ்சிக் கேட்பது போலவும், மாமன்னன் திரைக்கதையே தி.மு.க.வைப் பற்றியது என்றும், படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருப்பதாக புகழப்படும் நிலையில், உதயநிதியைப் பற்றி யாரும் பேசாசது குறித்தும் கிண்டல் செய்திருக்கிறார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…