ரஜினியை வைத்து உதயநிதியை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

ரஜினியை வைத்து உதயநிதியை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

Share it if you like it

உதயநிதி மட்டுமல்ல, அவரது காரும் கமலாலயம் பக்கம் வருவதற்கு தகுதி இல்லை என்று உதயநிதி ஸ்டாலினை போட்டுத்தாக்கி இருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இம்மாதம் 6-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 21-ம் தேதி கேள்வி பதில் நேரத்தின்போது பேசிய சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், ‘இந்தியாவிலேயே நம்பர் 1 முதலமைச்சர் என்று பெயரெடுத்து, திராவிட மாடல் ஆட்சியை அமைத்துவரும் முதலமைச்சருக்கு நன்றி. எதிர்கட்சித் தலைவர், துணைத் தலைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி. கடந்த முறை பேசும்போது வெளிநடப்பு செய்து விட்டீர்கள். இப்போது அவையில் இருப்பதற்கு நன்றி. அப்படியே வெளிநடப்பு செய்து சென்றாலும், என்னுடைய காரில்தான் தவறுதலாக ஏறுகிறீர்கள். அடுத்தமுறை தாராளமாக என் காரை எடுத்துச் செல்லலாம். ஆனால், கமலாலயம் மட்டும் சென்றுவிட வேண்டாம்’’ என்று நக்கலாகப் பேசினார்.

அதாவது, சட்டப்பேரவை முடிந்ததும், தலைமைச் செயலக வளாகத்தின் 4-வது கேட் வழியாக வெளியே வருவதுதான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வழக்கம். அதேபோல, இம்மாதம் 13-ம் தேதியும் சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு, அரங்கை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கு சாம்பல் நிறத்தில் நின்ற இன்னோவா கார் தன்னுடையதுதான் என்று நினைத்து ஏற முயன்றார். ஆனால், அது உதயநிதி ஸ்டாலினின் கார். எனவே, அங்கிருந்தவர்கள் சார், இது உங்க கார் இல்லை என்று கூறினார்கள். இதன் பிறகு, தனது கார் நிற்கும் இடத்துக்குச் சென்று அதே சாம்பல் நிறத்திலான தனது இன்னோவா காரில் ஏறிச் சென்றார் எடப்பாடியார். இதை சுட்டிக்காட்டித்தான் அவையில் அவ்வாறு பேசினார் உதயநிதி.

இந்த நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை. சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த அண்ணாமலை, விமானத்தில் சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “தமிழகத்தில் சமீபகாலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மின்வெட்டை பார்க்கும்போது 2006 – 2011 வரை இருண்ட காலமாக இருந்த தி.மு.க. ஆட்சியின் ட்ரெய்லர் போல் இருக்கிறது. இதற்கு மத்திய அரசு தர வேண்டிய நிலக்கரியை தருவதில்லை என்று முதல்வரும், மின்துறை அமைச்சரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதனை தெளிவுபடுத்த வேண்டியது பா.ஜ.க.வின் கடமை.

தனது காரை எடுத்துக் கொண்டு கமலாலயம் சென்று விடாதீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி கார் மட்டுமல்ல, உதயநிதியே கமலாலயம் வருவதற்கு தகுதி இல்லை. சும்மா வருபவர்கள் போகிறவர்கள் காரை எல்லாம் நாங்கள் கமலாலயத்துக்குள் அனுமதிப்பதில்லை. சினிமாவில் நடிப்பதை குறைத்து விட்டு மக்கள் பணி செய்யும்போது மட்டுமே உதயநிதி ஸ்டாலின் கமலாலயம் வரும் அருகதையை பெறுவார். அதுவரை அவரது காரை அவரே எடுத்தால் கூட, படிக்காதவன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது லட்சுமி என்கிற காரை ஸ்டார்ட் செய்யும்போது, எப்படி ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணுகிறதோ, அதேபோல உதயநிதி ஸ்டாலின் கமலாலயம் பக்கம் வருவதற்காக காரில் ஏறி ஸ்டார்ட் செய்தால் கார் ஸ்டார்ட் ஆகாது. அதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும். கமலாலயத்துக்கு வருபவர்கள் அனைவரும் சுயமாக அரசியல் செய்து, மக்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பும் மக்கள் பணியாளர்கள். ஆனால், 3-வது தலைமுறையாக, 5-வது தலைமுறையாக அரசியல் செய்து வரும் உதயநிதி ஸ்டாலின் போன்றவர்களுக்கு அந்த தகுதி இல்லை” என்று வெளுத்து வாங்கி இருக்கிறார். இக்காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it