மனிதாபிமான அடிப்படையில் பாரதப் பிரதமர் மோடி உக்ரைனுக்கு உதவ வேண்டும் என அந்நாட்டு அதிபர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்
உக்ரைன் – ரஷ்யா இடையே தற்போது போர் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. போரை நிறுத்தும் படி இருநாடுகளிடமும் உலக நாடுகள் கேட்டுக் கொண்டன. எனினும், போர் நிற்கவில்லை. இந்தியா, கூறினால்தான் இருநாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வரும் என அமெரிக்கா உட்பட பல வல்லரசு நாடுகள் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில் தான், உக்ரைன் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எமினே ட்ஜபரோவா இந்தியா வந்துள்ளார். அவர், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகியை சந்தித்தார். அப்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எழுதிய கடிதத்தை அவரிடம் வழங்கினார். அதில், மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள், மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பாரதப் பிரதமர் மோடி உக்ரைனுக்கு வழங்க வேண்டும் என அக்கடித்தில் உக்ரைன் அதிபர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.