மோடி நினைத்தால் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த முடியும்: வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதி!

மோடி நினைத்தால் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த முடியும்: வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதி!

Share it if you like it

இந்திய பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த முடியும் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுக்கத் தொடங்கியது. இந்த போர் சுமார் ஓராண்டை நெருங்கி இருக்கிறது. இப்போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இருந்து வருகின்றன. மேலும், உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவிகளையும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அதோடு, ரஷியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கின்றன. இப்போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. பாரத பிரதமர் மோடியும் இது போருக்கான தருணம் அல்ல, ரஷிய அதிபர் புடினிடம் நேரடியாகவே கூறினார்.

இந்த நிலையில்தான், இந்திய பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் – ரஷியா போரை நிறுத்த முடியும் என்று அமெரிக்கா வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியிருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜான் கிர்பியிடம், உக்ரைன் – ரஷியா இடையேயான போரை இந்திய பிரதமர் மோடி நிறுத்துவதற்கான நேரம் தாண்டிவிட்டதா? என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த ஜான் கிர்பி, “இந்திய பிரதமர் மோடியால் உக்ரைன் – ரஷ்ய போரை நிறுத்த முடியும். ரஷ்ய அதிபர் புதினை இந்திய பிரதமர் மோடி சந்தித்து போரை நிறுத்தும்படி வலியுறுத்தினால், கண்டிப்பாக இந்த போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. போரை நிறுத்த இந்திய பிரதமர் மோடி, என்னென்ன முயற்சி எடுக்க வேண்டுமோ, அதை அவரிடமே விட்டுவிடுகிறேன். பிரதமர் மோடி என்ன முடிவு எடுத்தாலும், அதை அமெரிக்கா வரவேற்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப் பயணம் செய்து நல்லுறவை வளர்த்து வருகிறார். அதேபோல, மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி உள்நாட்டிலேயே அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்வதால், இந்தியாவின் செல்வாக்கு சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. மேலும், கொரோனா பேரிடர் காலத்தில் உலக நாடுகள் பலவற்றுக்கும் கோவேக்ஸின் தடுப்பூசி வழங்கினார். தவிர, பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் நாடுகளுக்கு பொருளாதார உதவியும் செய்து வருகிறார் மோடி. இதனால், மோடியின் செல்வாக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதன் வெளிப்பாடே மோடி நினைத்தால் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த முடியும் என்று அமெரிக்க கூறியிருப்பதற்கு காரணமாகும்.


Share it if you like it