இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம் – புறக்கணித்த இந்தியாவின் ராஜ தந்திரம் பலே..!

0
2094
இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம் - புறக்கணித்த இந்தியாவின் ராஜ தந்திரம் பலே..!

2009 ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் பல லட்சம் தமிழர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். ஈழத்தமிழ் பெண்கள் கற்பழக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இலங்கை ராணுவம் மிக மோசமான போர்க்குற்றங்களில் ஈடுபட்டது. இதனை எதிர்த்து ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ இந்திய அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்காதது உலக தமிழர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக ஓநாய் ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன …

ஆனால் அது உண்மையா..! இந்தியா உண்மையில் அமைதியாக தான் இருந்ததா..! இல்லை திரை மறைவில் வேலை பார்த்ததா..!

கடந்த மாதங்களில் நடந்த அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தால் புரியும், பலத்தை காட்டி மிரட்டி அடுத்து அமைதியாக பேசி பணியவைக்கும் ராஜதந்திரத்தை இந்தியா கையாண்டது. அதன் முதல் அடியாக களம் இறங்கியது நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நேரடியாக இலங்கை சென்றார். இலங்கை செல்ல அவர் தேர்ந்தெடுத்த தேதியே அன்நாட்டு அரசுக்கு பேரிடியாக அமைந்தது. ஆம் அவர் தேர்தெடுத்த தேதி நவம்பர் 27, உயிரிழந்த விடுதலைப் புலி வீரர்களின் நினைவாக கடைபிடிக்கப்படும் மாவீரர் தினம் அந்த நாள். சென்றவர் சும்மா வரவில்லை அங்கு திரை மறைவில் பலரையும் சந்தித்தார்…

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு சென்றதாக கரணம் சொல்லப்பட்டாலும் சம்பந்தமே இல்லாமல் ராஜபக்சேவை அஜித் தோவல் சந்தித்தார் இதில் இறுதி போர் குறித்த பேச்சு வார்த்தை நடக்காமலா இருந்திருக்கும்…

அடுத்ததாக அமைதியாக இலங்கைக்கு புரியவைக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை, இலங்கைக்கு அனுப்பி வைத்தது இந்தியா. இலங்கை சென்ற ஜெய்சங்கர் அங்குள்ள பிரதான தமிழர் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, பிரதான தமிழர் கட்சி மற்றும் தமிழர் பிரதிநிதிகளை அவர் சந்தித்துப் பேசினார். இதன் மூலம் இலங்கை தமிழர்களுடன் இந்தியா உறுதியாக இருக்கும் என்பதை அந்நாட்டு அரசுக்கு இந்தியா புரிய வைத்தது…

வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதான தமிழர் கட்சி மற்றும் தமிழர் பிரதிநிதிகளை அவர் சந்தித்துப் பேசிய காட்சி

இதற்கிடையே தமிழ் சமூகத்திற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துமாறு காணொளிவாயிலாக மஹிந்த ராஜபக்ஷேவிடம் நேரடியா தெரிவித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி …
இலங்கை மசிவதாக தெரியவில்லை, ஆட்டத்தை தொடங்கியது இந்தியா

முதல் வேலையாக அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்காக இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடத்தில் இருந்து கல் கொண்டுவரும் நிகழ்வை நடத்தி மனோதத்துவ ரீதியில் இலங்கை மக்களுக்கு இந்தியாவோடு பிணைப்பினை ஏற்படுத்தி வைத்தது.

மத்திய அமைச்சர் திரு விகே சிங், கச்சத்தீவை திரும்ப பெற தயங்க மாட்டோம் என்று சொல்லி வைத்தார்.

இங்கிலாந்து அரசு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக களம் இறங்க போவதாக அறிவித்தது.

இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட இந்தியாவின் நெருங்கிய நட்புநாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை ஐ.நா., வில் கொண்டு வந்தன …

உள்நாட்டு அழுத்தத்தை தவிர்க்க, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்கு அளிக்க போவதாக செய்தி பரப்பபட்டது…

ஆனால், முன்னரே திட்டமிடப்பட்டது போலவே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டது இந்தியா. ஆனாலும் முன்கூட்டியே சொல்லி வைத்தது போலவே தனது நட்பு நாடுகள் பலவற்றை இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வாக்கு அளிக்க செய்து தனது ராஜதந்திர நகர்வில் பெரு வெற்றி பெற்று இருக்கிறது இந்தியா.

கடைசியாக மௌனம் கலைத்தது. இந்தியாவை சாதாரணமாக எடைபோடாதீர்கள் என்று சொல்லாமல் சொன்னது போன்று. இங்கிலாந்து பிரதமரை இலங்கையில் இருந்து வெறும் 27 கி.மீ தூரத்தில் உள்ள தனுஷ் கோடியில் வைத்து சந்திக்க போவதாக அறிவித்தது இந்தியா.

இந்த சந்திப்பின் மூலம் இங்கிலாந்து, மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நம் மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார்.

நம் தமிழகத்தில் இதனை தேர்தல் நேர கழிசடை அரசியல் ஆக்காமல் தடுத்துள்ளார்…

போதா குறைக்கு பாஜகவின் தமிழக தேர்தல் அறிக்கையில் இலங்கை அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்..

இதன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை கொடுக்கு 13வது சட்ட பிரிவை அமல்படுத்தாமல் போனால் இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்களாக மாறிவிடும் சூழல் உருவாகி இலங்கையின் வடக்கு பிராந்தியம் இந்திய வசமாகும் சாத்திய கூறுகள் நாளடைவில் அதிகரித்து விடும் என்பதை உணர்த்தி இலங்கை வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறார்.

நிச்சயமாக யாரும் யூகிக்க முடியாத அணுகல் இது…
மாபெரும் ராஜதந்திர வெற்றி இது..
இப்பொழுது சொல்லுங்கள் இந்திய பிரதமர் இலங்கை பிரச்சனையில் ஒன்றுமே செய்யவில்லையா ..?

விக்னேஷ் வாசுதேவ்.R

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here