என் கெட்ட நேரம் எம்.பி.யாகிட்டேன்: ராகுல் பேச்சு… பா.ஜ.க. கிண்டல்!

என் கெட்ட நேரம் எம்.பி.யாகிட்டேன்: ராகுல் பேச்சு… பா.ஜ.க. கிண்டல்!

Share it if you like it

துரதிருஷ்டவசமாக எம்.பி.யாகி விட்டேன் என்று ராகுல் காந்தி பேசியது பா.ஜ.க.வினர் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.

சமீபத்தில் லண்டன் சென்றிருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “நீதித்துறை, நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் முழுமையாக தாக்கப்படுகின்றன. அவை ஆபத்தில் உள்ளன. தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க.தான் காரணம். ஜனநாயகத்தை மீட்டெடுக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என்று பேசியிருந்தார்.

இதையடுத்து, ராகுல் காந்தியின் பேச்சு இந்தியாவை அவமானப்படுத்துவதுபோல உள்ளது. இந்திய விவகாரத்தைப் பற்றி வெளிநாட்டில் ஏன் போய் பேச வேண்டும். ஆகவே, ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இதற்காக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றம் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, “துரதிருஷ்டவசமாக நான் எம்.பி.யாகி விட்டேன்” என்று கூறினார். இதைக் கேட்டு செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், குறுக்கிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், அப்படிப் பேசக்கூடாது என்று ராகுல் காந்தியிடம் கூறியதோடு, எப்படி பேச வேண்டும் என்று திருத்தண் செய்து கூறினார்.

இதையடுத்து, தனது தவறை திருத்திக் கொண்ட ராகுல் காந்தி, உங்களின் துரதிருஷ்டம் நான் எம்.பி.யாகி விட்டேன் என்று கூறினார். ராகுல் பேசிய இந்த வீடியோவை பா.ஜ.க.வினர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ராகுல் காந்திக்கு பேசக் கற்று கொடுக்க போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி வருவதோடு, கேலி, கிண்டலும் செய்து வருகின்றனர்.


Share it if you like it