சமூகநீதி பெயரில் தேசிய இறையாண்மையை அவமதிக்கும் சாதிய கட்சிகள் – பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்

சமூகநீதி பெயரில் தேசிய இறையாண்மையை அவமதிக்கும் சாதிய கட்சிகள் – பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்

Share it if you like it

சுதந்திர இந்தியாவில் விளிம்பு நிலை வாழ்வில் இருக்கும் கடை கோடி மக்களை கை தூக்கி விட வேண்டும் . அதன் மூலம் அவர்களும் வளர்ச்சி பாதையில் இணைந்து தங்களின் அடுத்த தலைமுறைகளை உயர்ந்த வாழ்வாதாரத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் தான் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் இட ஒதுக்கீடு என்ற சட்ட சலுகையை முன்னிறுத்தினார். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நடைமுறையில் இருந்து பின்னாளில் விலக்கிக் கொள்ளப்பட்டு அனைவருக்கும் பொதுவான சமூக நீதியை நிலை நிறுத்தும் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற தெளிவான வரையறையில் தான் அம்பேத்கர் தனது தேசிய கடமையை செய்தார். ஆனால் இந்த சலுகையால் பலன் அடைந்த மக்களை தங்களின் நிரந்தர வாக்கு வங்கியாக மாற்ற திட்டமிட்ட கடந்த கால மத்திய ஆளுங் கட்சி இந்த இட ஒதுக்கீட்டை தொடரச் செய்து அதன் மூலம் தேசத்தில் பல குழப்பங்களுக்கும் பின்னடைவுகளுக்கும் சமூக முரண்பாடுகளுக்கும் நிரந்தரமாக வித்திட்டது. இந்த குழப்பங்களை முன் வைத்து பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து தனது அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொண்டது.

இந்த அடிப்படையில் தான் பட்டியல் சமூக மக்களை ஒரு வாக்கு வங்கியாக ஒருங்கிணைத்து அவர்களுக்கான அரசியல் முகமாக செயல்படுவதும் அதன் மூலம் அவர்களுக்கான அரசியல் உரிமை – பொருளாதார முன்னேற்றம் – சமூக அந்தஸ்து பெற்று தர போவதாகவும் தமிழகத்தில் ஒரு கட்சி உருவானது. எதிர்பார்த்தபடி குறிப்பிட்ட சமூக மக்கள் நம்பிக்கை – நல்லெண்ணத்தின் அடிப்படையில் அப்பாவிகளாக அந்த கட்சி தலைவர் பின் அணி திரண்டார்கள். கணிசமான வாக்கு வங்கியை கொண்டிருந்த அவரை தனது சாதி – மத பிளவு அரசியலுக்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் சரியாகப் பயன்படுத்த திட்டமிட்ட திராவிடம் அவரை லாவகமாக வளைத்து தன் பக்கம் நிறுத்திக் கொண்டது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கு வங்கியில் தனதாக்கிக் கொண்டதோடு தன்னை சமூக நீதியின் காவலனாக அரசியல் அரங்கிலும் காட்டிக் கொண்ட இந்த கூட்டணி மறுபுறம் எதிர் தரப்பை எப்போதும் சாதிய அடிப்படையில் மத அடிப்படையிலும் மிரட்டி அரசியல் செய்யும் மலிவான அரசியலுக்கான பகடையாகவும் இரு தரப்பும் ஒன்றையொன்று பகடையாக பயன்படுத்திக் கொண்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் முகம். குரலற்றவர்களின் குரலான ஜனநாயக கோரிக்கை .பின்தங்கி இருக்கும் கடைக்கோடி மக்களை முன்னேற்றுவதற்கான அரசியல் சேவை என்ற பெயரில் களம் கண்ட கட்சி ஆரம்பம் முதலில் உயர் சாதி வகுப்பினர் – மேல் தட்டு மக்கள் என்று அவர்கள் சொல்லும் அனைத்து தரப்பையும் திட்டமிட்டு அவதூறு பேசி ஒரு புறம் அவர்கள் அடையாளப்படுத்திய அந்த மேல் தட்டு மக்களிடம் ஒரு கசப்புணர்வை விதைத்தது . மறுபுறம் தன் பின் நிற்கும் பட்டியல் சமூக மக்களிடம் அடக்கப் பட்டோம் இன்னும் கூட ஒதுக்கப்படுகிறோம் என்று பிரிவினை பேசி ஒரு தாழ்வு மனப்பான்மையையும் திட்டமிட்டு வளர்த்தது. இந்த கசப்புணர்வும் – தாழ்வு மனப்பான்மையும் இரண்டு கரைகளாக வளர்ந்து வர இடையில் அந்த கட்சி தனது வாக்கை லாபமாக அறுவடை செய்து அரசியல் களத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

உண்மையில் என்ன நடக்கிறது?. நம்மை முன்னிறுத்தி எப்படிப்பட்ட அரசியல் செய்யப்படுகிறது.? என்பதை அறியாத அப்பாவி மக்கள் தங்கள் சமூகத்திற்கான வழிகாட்டுதல் என்ற நம்பிக்கையில் அணிதிரண்டதை பயன்படுத்தி மிரட்டும் அரசியலை செய்ய தொடங்கிய அந்த கட்சி, அடங்க மறு – அத்துமீறு என்று தன் கட்சி சார்ந்த இளைஞர்களை தவறாக வழி நடத்தியது. அவனை வெட்டு அவளைக் கட்டு என்று பகிரங்கமான மேடைப் பேச்சுகளாலும் வக்கிரமான அரசியலாலும் பல தரப்பு மக்களிடமும் வெறுப்புணர்வையும் வன்மத்தையும் மட்டுமே திட்டமிட்டு வளர்த்தது.

இந்த வன்மமும் வெறுப்புணர்வும் சாதி என்பது வெறும் அடையாளமாக சகோதரத்துவமாக வாழ்ந்து வந்த மக்களிடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது. அந்த இடைவெளியை உணர்ந்து சரி செய்ய வேண்டிய கட்சிகளும் வாக்கு வாங்கி அரசியலுக்கு பயந்து கள்ள மவுனம் காத்தது. அதன் பலன் இன்று கால் நூற்றாண்டு காலம் முன்பே மறைந்து போன சாதிய பிளவுகளும் வன்மங்களும் திரும்பிய பக்கமெல்லாம் மீண்டும் தலைவிரித்து ஆடுகிறது.

பட்டியல் சமூக மக்களை பாதுகாக்கிறேன் என்று கட்சி தொடங்கியவர்கள் இன்று திரும்பிய பக்கம் எல்லாம் சனாதனத்தை வேரறுப்போம் என்று மேடை தோறும் முழங்குகிறார்கள். மறுபுறம் இந்து ஆலயங்கள் வழிபாட்டு முறைகள் பண்பாடு கலாச்சாரம் மக்களின் வாழ்வியல் என்று அனைத்தையும் ஆபாசமாக வன்மமாகவும் பேசி அவமதித்து சமூக நீதி என்றாலே அது இந்து மதத்தை அவமதிப்பதும் மாற்று மதத்தை தழுவுவதும் தான் என்ற நிலையில் திட்டமிட்ட கருத்தியலை வளர்த்து வருகிறார்கள்..

சாதி என்பது நம் அனைவரின் அடையாளமாக இருக்கட்டும் . அனைத்து சாதியினரிடமும் அன்போடும் சகோதரத்துடனும் நட்புறவு வளர்ப்போம். மாற்று சாதியினரை திருமணம் செய்து தான் சாதி பாகுபாடை ஒழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனைத்து சாதியினரையும் சகோதர – சகோதரிகளாக மதித்து சகோதர உறவின் மூலம் கூட சாதி பாகுபாடு இல்லாத சமத்துவ சமூகத்தை உருவாக்க முடியும் என்று தன் சமூக மக்களை ஆரோக்கியமான வளர்ச்சி பாதையில் வழிநடத்தி போகும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசுவாமியை சாதி கட்சி தலைவர் என்று குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முயல்வதும் ஆனால் சாதி கட்சியான தானும் தான் சார்ந்தவர்களும் செய்யும் சட்டவிரோத – சமூக விரோத – தேச விரோத செயல்களை கூட சமூக நீதி என்று தோழமை சுட்டுவதுமான மலிவான அரசியலையே அந்த கட்சி இன்று வரை தொடர்கிறது.

அவனை வெட்டு. அவளை கட்டு . என்ற வக்கிரமும் இந்த இந்த சாதியரின் ஆண்கள் எல்லாம் ஆண்மையற்றவர்கள். அதனால் தான் அந்த வீட்டுப் பெண்கள் எங்களைத் தேடி வருகிறார்கள் என்று பொது மேடையில் பெண்களை அதிலும் குறிப்பிட்ட சமூக பெண்களை அவமதிப்பது. இந்த சாதிப் பெண்களின் வயிற்றில் தங்களின் கட்சி காரர்களின் கரு வளர வேண்டும் என்று பொது மேடையில் பேசியும் சமூகத்தில் அனைத்து சாதியினரையும் ஒருவித அச்சத்தோடும் பதற்றத்தோடுமே வாழும் நிலைக்கு கொண்டு வந்தது .

வட மாவட்டங்களில் பல ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட பல திருமணங்கள் போலியாகவும் சாதி மற்றும் குற்ற பிண்ணணி கொண்ட திட்டமிட்ட சதி இருந்தது வெளியாகி தமிழகம் அதிர்ந்தது. அதன் பின்னிருந்த பெரும் சூழ்ச்சி வெளியாகி பெரும் சர்ச்சை எழுந்தது . அது சம்பந்தமான சர்ச்சைகள் ஆதாரங்கள் பலவும் வெளியாகி தமிழகத்தில் இருந்த அந்த குறிப்பிட்ட கட்சியை குற்றவாளியாக நிறுத்தியது. அந்தக் கட்சியும் அதன் தலைவரும் அதை தங்களது உரிமையாக இனியும் இப்படித்தான் என்பது போல் ஏளனமாக பேசினார். இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய அரசியல் கட்சிகள் வாக்கு வங்கிக்காக கள்ள மவுனம் காத்தது.

இன்று வரை இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் பாஜக – பாமக – இந்து மக்கள் கட்சி – புதிய தமிழகம்- தேவர் சமூக திருமாறன் தவிர வேறு எந்த ஒரு அரசியல் கட்சிகளும் பெரிதாக இதைப் பற்றி பேசியதாக கண்டித்ததாக செய்திகள் கூட கிடையாது. இந்த விஷயத்தில் திரு- பாலு என்ற வழக்கறிஞர் பெரும் சட்ட போராட்டம் நடத்தி தமிழகத்தில் நடக்கும் பதிவு திருமணங்களில் தாய் ஒப்புதல் அல்லது சாட்சியம் கட்டாயம் என்ற ஒரு குறைந்த பட்ச பாதுகாப்பு கட்டமைத்தார். ஆனால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சமூக அக்கறை சார்ந்த அவரின் இந்த நல்லெண்ண முயற்சியை சாதிய வன்மமாக ஆதிக்க மனோபாவமாக திரிக்கப்பட்டது.

வளரிளம் பெண்கள் – ஆண்கள் என்று வீட்டில் திருமண வயதில் குழந்தைகள் இருந்தாலே அவர்களை பாதுகாக்க ஒரு பதற்றம். சொந்த உழைப்பில் நல்ல வருமானம் வசதியோடு வாழும் பட்சத்தில் அவர்களை குறி வைத்து நாடக காதல் அரங்கேற்றப்படும் திட்டமிட்ட சூழ்ச்சி. இவற்றிற்கெல்லாம் ஆதரவாக ஒரு வலுவான வழக்கறிஞர் அணி காவல்துறை தொடங்கி மேல்மட்ட அரசு நிர்வாகம் வரை திட்டமிட்ட ஒருங்கிணைப்பு – ஒத்துழைப்பு என்ற அராஜகத்தால் தமிழகம் முழுவதிலும் பாதிக்கப்படாத கிராமமும் இல்லை. குடும்பமும் இல்லை என்ற அளவில் நாடகக் காதல் நீளுகிறது.

வட மாவட்டங்களில் தலைவிரித்தாடிய இந்த நாடக காதல் மிரட்டல் – பணம் பறிப்பு இறுதியில் மதமாற்றம் – கலாச்சார சீரழிவு – போதை – வன்முறை என்று இந்த நாடக காதலில் அகப்பட்ட ஆண் – பெண் வாழ்க்கையை சீரழிக்கப்பதோடு அவர்கள் சார்ந்த குடும்பத்தின் கவுரவம் சிதைக்கப்பட்டு குடும்பத்தாரும் ஒன்று தற்கொலை செய்து மடிய வேண்டும். இல்லையேல் நடைபிணமாக வாழ வேண்டும். இரண்டும் இல்லை என்றால் கௌரவ கொலை என்ற பெயரில் தங்களுக்கான நீதியை தாங்களே தேடிக் கொள்ள வேண்டும் என்ற அவலமான நிலைக்கு தள்ளப்பட்டனர். தனது சொந்த கட்சிக்காரர்களே இது போன்ற விஷயங்களால் பாதிக்கப்படும் போது கூட சம்பந்தப்பட்ட கட்சியின் மேல்மட்ட தலைவர்களும் நிர்வாகிகளும் தங்களின் கூட்டணி தர்மம் என்ற வஞ்சகத்திற்கும் வாக்கு வங்கி அரசியல் என்ற சுய லாபத்திற்காகவும் இந்த நாடக காதல் கும்பலை வளர்த்தெடுக்கும் அந்த கட்சியையும் அதன் தலைவரையும் ஆதரித்து தமிழகத்தின் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை கௌரவமான வாழ்க்கையை சிதைக்கிறது.

தங்களின் இட ஒதுக்கீடு – சலுகை மூலம் இந்து மத அடையாளத்தில் அனைத்தையும் அனுபவிப்பவர்கள். அந்நிய மதத்தை ஏற்றுக் கொண்டு அந்த மதத்தின் முகவராக மதமாற்றத்தில் ஈடுபடுவதும் மத பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது என்று வெளிப்படையான பயங்கரவாத அரசியலை முன்னெடுக்கிறார்கள். மறுபக்கம் இன்னும் இந்து இந்திய அடையாளத்தோடு வாழும் மக்களை சீண்டி பார்ப்பதும் அவர்களை அவமதித்து வெறுப்பின் உச்சத்தில் அவர்கள் எதிர்வினை ஆற்றும் போது அதை வைத்து சாதி மத பிளவுகளை மோதல்களை உருவாக்கி பிண அரசியல் செய்து மீண்டும் தங்களின் அரசியல் லாபத்தை நிலை நிறுத்திக் கொள்வதையும் வழக்கமாக்கி வருகிறது.

தனது வாக்கு வங்கி அரசியல் அதிகார லாபத்திற்காக ஆளும் வர்க்கம் இதையெல்லாம் கடந்த காலங்களில் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நலன் பாதுகாப்பை உறுதி செய்வதே உண்மையான சமூக நீதி . அதை திறம்பட நிர்வகிக்கும் ஆட்சியாளர் மட்டுமே சமூக நீதியை சம நீதியை இங்கு நிலை நிறுத்த முடியும் இதை எல்லாம் செய்து முடிக்க எந்த காலத்திலும் தொடர்ந்து முன்னெடுக்க இங்கு அனைவருக்கும் அனைத்தும் என்ற உறுதியை நம்பிக்கையை வளர்க்கும் பொது சிவில் சட்டம் அவசியம் என்ற இலக்குகளோடு அரசியல் களம் கண்ட பாஜக தற்போது நாடு முழுவதிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கி விட்டது.

இட ஒதுக்கீடு சலுகை அதன் மூலமாக அரசியல் வாக்கு வாங்கி அதன் அடிப்படையிலான சுய லாபம் அதிகாரம் என்று தன்னை நம்பி இருக்கும் ஒரு சமூக மக்களை பகடைக்காய் ஆக்கி தன்னை வளப்படுத்திக் கொண்டு ஆனால் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் இழிசெயலை போல அதே பட்டியல் சமூக மக்களை இந்து இந்திய தேசிய இறையாண்மையில் இருந்து திட்டமிட்டுப் பிரித்து மதமாற்றத்தின் மூலம் இங்கு பிரிவினையையும் மத பயங்கரவாதத்தையும் வளர்க்கும் கொடூரத்தையும் செய்து வரும் அந்த குறிப்பிட்ட கட்சி தலைவர் இந்த பொது சிவில் சட்டம் என்ற ஒற்றை அஸ்திரம் தங்களது அரசியலை அஸ்தமிக்க செய்வதோடு இனி எந்த காலத்திலும் மீண்டும் தங்கள் அராஜகத்தை நிலை நிறுத்த முடியாது என்ற அச்சத்தின் வெளிப்பாடாக பொது சிவில் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று திட்டமிட்ட விஷமப் பிரச்சாரங்களையும் எதிர்மறை கருத்தியலையும் பொய் புரட்டு அரசியலாக தொடர்ந்து முன்னெடுக்கிறார்.

பட்டியல் சமூக மக்களை பாதுகாக்கிறேன் என்று வந்த கட்சி இன்று அதே பட்டியல் சமூக மக்களை மறைமுகமாக மதமாற்ற நிர்பந்தகிறது. எந்த சட்டத்தின் அடிப்படையில் சலுகைகளை அனுபவிக்கிறதோ? அதே சட்டத்திடம் மதம் மாறி போனாலும் சாதிய அடிப்படையில் ஆன சலுகைகள் தொடர வேண்டும் என்று மணிப்பூரில் தொடங்கிய கலவரத்தை தமிழகத்திலும் விதைப்பதற்கான தீப்பொறியை பற்ற வைக்கிறது. எந்த மதத்தில் சாதி பாகுபாடுகள் இருப்பதாக சொல்லி தன் சமூக மக்களை மதமாற்றியதோ ? அந்த மதம் மாறிப்போன இடத்திலும் சாதி பாகுபாடுகள் இருப்பதாக பேசி அப்படித்தான் இருக்கும் நாம்தான் அனுசரித்துப் போக வேண்டும் என்று பேசி அந்த பட்டியல் சமூக மக்களை இந்துக்களாகவும் இருக்க முடியாமல், மதமாறிப்போன இடத்திலும் மரியாதையாக வாழவிடாமல் திரிசங்கு நிலையில் நிறுத்திவிட்டது.

இந்த சாதி மத பிளவுகளும் அதை முன் வைத்து செய்யப்பட்ட அரசியலும் தங்களின் இட ஒதுக்கீட்டு சலுகையை பயன்படுத்தி தங்களை வைத்து அவர்களை வளப்படுத்திக் கொள்வதும் தங்களை அரசியல் பகடையாக்கி அவர்களது கட்சி அரசியல் செல்வாக்கு பெறுவதும் ஒன்றே நோக்கம் என்பதையும் தாங்கள் திட்டமிட்டு மடை மாற்றம் செய்யப்பட்டு அந்நிய மதத்தில் புகுத்தப்பட்டு தங்களின் பூர்வீகம் பாரம்பரியம் பறிக்கப்படுவதை உணர்ந்து கொண்ட பட்டியல் சமூக மக்கள் உண்மை உணர்ந்து தாய் மதம் திரும்புவதும் தங்களின் பாரம்பரிய குலதெய்வ வழிபாடு திருவிழாக்களை முன்னெடுப்பதையும் ஜீரணிக்க முடியாத அந்தக் கட்சியின் தலைமை இவை எல்லாம் ஆர்எஸ்எஸ் பாஜகவின் திட்டமிட்ட சதி. சேரி பகுதியிலும் குடிசை வாழ் மக்களிடம் கூட பாஜக வேரூன்ற பார்க்கிறது .அதை அனுமதிக்க கூடாது பாஜகவின் கொடிக்கம்பங்களை வைக்கவோ கொடி ஏற்றவோ கூட அவர்களை அனுமதிக்காதீர்கள் என்று தன் கட்சிக்காரர்களையும் தன் சமூக மக்களையும் வெளிப்படையாக உசுப்பி வருகிறார். .

மொத்தத்தில் தன்னுடைய அரசியல் தான் சார்ந்திருக்கும் சித்தாந்தம் எல்லாமே பட்டியல் சமூக மக்களையும் அவர்களுக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கி இருக்கும் இட ஒதுக்கீட்டு சலுகையும் தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி தன்னை அதிகாரத்தில் நிலை நிறுத்தி அதன் மூலம் உள்நாட்டு துரோகத்திற்கும் அந்நிய சதிகளுக்கும் ஏதுவாக இங்கு திட்டமிட்ட பிரிவினையையும் மத பயங்கரவாதத்தையும் நிலை நிறுத்துவது ஒன்றே என்பதை அந்த கட்சி வெளிப்படையாக நிரூபித்து வருகிறது.அசிங்கமான பொம்மைகள் இருப்பது கோவில் என்ற அநாகரிகம் தொடங்கி சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பொது மேடையில் ஒரு குறிப்பிட்ட மதத்தை அதன் சார்ந்த வாழ்வியலை மக்களை துவேஷிப்பது தொடங்கி தனது ஒவ்வொரு செய்கையின் மூலம் இந்திய தேசியத்தையும் அரசியல் சட்டத்தையும் தேச இறையாண்மையையும் அவமதிப்பதையே அந்த கட்சி தனது தினசரி வாழ்க்கையாக வைத்துள்ளது.

பட்டியல் சமூக மக்களுக்கு சம நீதி வேண்டும் என்று கேட்கும் அதே கட்சி காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து மூலம் சொல்லொணா கொடுமைகளை அனுபவித்த பட்டியல் சமூக மக்களை புறக்கணித்தது . பாஜக அந்த சிறப்பு அந்தஸ்தை விலக்கி காஷ்மீரில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் சகல உரிமையோடு வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டு வந்த போது அதை முழுமூச்சாக எதிர்த்து இன்றுவரை தனது சிறுபான்மை வாக்கு வங்கி பணபலம் அதிகார பலன் தேவைக்காக காஷ்மீரில் இருக்கும் பட்டியல் சமூக மக்களை பலிகடாவாக்க பார்க்கிறது .

எந்த பட்டியல் சமூக மக்களுக்காக அரசியல் செய்கிறோம் என்று களம் கண்டதோ? இன்று அதே பட்டியல் சமூக மக்கள் குடிநீர் மலம் கலக்கும் அவலம் திட்டமிட்டு அவமதிக்கப்படும் வன்மம் – வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் என்று கொடுமைகளை அனுபவிக்கும் போது அதை செய்பவர்கள் ஆளும் அதிகாரம் படைத்தவர்கள் அல்லது அவர்களுக்கு வேண்டியவர்கள் என்ற காரணத்தால் எதிர்த்துப் பேசினால் கேள்வி கேட்டால் தனது அரசியல் ஆதாயம் பட்டு போய்விடும் . தனது அதிகார பண செல்வாக்கு உள்ளிட்ட ஆதாயங்கள் தடைப்பட்டுவிடும் என்று தோழமை சுட்டுதல் என்று தன் சொந்த சமூக மக்களை பலி கொடுத்து வருகிறது.

இந்த தேசத்தில் பாவப்பட்ட பட்டியல் சமூக மக்களை எந்த வகையிலும் இந்து ஆன்மீக குடையிலும் இந்திய தேசிய வழியிலும் இணைய விடக்கூடாது அவர்களை முன்னிறுத்தி ஒரு மிரட்டல் அரசியல் செய்வதன் மூலம் எப்போதும் இந்த மண்ணில் ஒரு குழப்பத்தையும் பதற்றத்தையும் விளைவித்து அதன் மூலம் அரசியல் லாபம் பார்க்க நினைக்கும் இது போன்ற சாதியக் கட்சிகளையும் அமைப்புகளை மத்திய அரசு நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். இந்த கட்சிகளின் தலைவர்கள் நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை தேச விரோதிகளாக பிரகடனம் செய்து அவர்கள் இனி எந்த காலத்திலும் கட்சிகள் அமைப்புகள் தொடங்கவும் அரசியல் அரங்கில் அதிகாரம் செலுத்தவும் முடியாத வண்ணம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த குளறுபடிகளுக்கு எல்லாம் காரணமான சாதிக்கொரு நீதி – மதத்திற்கு ஒரு சட்டம் என்ற அவலத்தை முடித்து வைத்து இந்திய தேசத்தின் மக்கள் அனைவருக்கும் சம நீதி சேர்க்கும் பொது சிவில் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு.


Share it if you like it