விமர்சிக்கும் பொழுது ஒன்றிய அரசு, நிதி கேட்கும்பொழுது மத்திய அரசா ? நெட்டிசன்கள் கிண்டல் !

விமர்சிக்கும் பொழுது ஒன்றிய அரசு, நிதி கேட்கும்பொழுது மத்திய அரசா ? நெட்டிசன்கள் கிண்டல் !

Share it if you like it

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, பிரதமரை நேரில் சந்தித்து வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், ”தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது.

இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ.5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ‘மிக்ஜாம்’ புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக முதல்வர் ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் மற்றும் பேட்டிகளில் பேசும்பொழுது மோடி அரசை மத்திய அரசு என்று குறிப்பிடமாட்டார். அதற்கு பதில் ஒன்றிய அரசு என்றுதான் முதல்வர் ஸ்டாலினும் மற்றும் திமுக நிர்வாகிகளும் அழைப்பார்கள். ஆனால் தற்போது நிவாரண நிதிக்காக மத்திய அரசிடம் கேட்கும்போது மத்திய அரசு என்று குறிப்பிட்டுள்ளதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு 4 ஆயிரம் கோடி மதிப்பில் வடிநீர் கால்வாய் பணி செயல்படுத்தி முடிக்கப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்தார். 4 ஆயிரம் கோடி செலவிட்டும் வெள்ள நீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. 4 ஆயிரம் கோடியை என்ன செய்தீர்கள் என்று நெட்டிசன்கள் திமுக அரசை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it