உத்தரப் பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மவுலானா ஹஃபீஸ் மாமூனை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மார்கூப் மகன் ஹஃபீஸ் மாமூன். இவர், காஜியாபாத் மாவட்டம் லோனி போலீஸ் நிலைய பகுதியான பூஜா காலனியிலுள்ள ஆயிஷா மசூதியில் மவுலானாவாக பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில், பாக்பத் மாவட்டம் அசலா கிராமத்தில் வசிக்கும் ஹஃபீஸ் மாமூனின் உறவினர் ஒருவர், தனது 12 வயது பெண் குழந்தையை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆயிஷா மசூதியிலுள்ள மதரஸாவில் சேர்த்திருக்கிறார். அன்று முதல் அச்சிறுமி மதரஸாவில் தங்கி தினசரி இஸ்லாமிய மதக்கல்வி பயின்று வந்தார். இச்சிறுமி மீது ஹஃபீஸ் மாமூனுக்கு ஏற்கெனவே ஒரு கண் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 28-ம் தேதி இரவு, மவுலான ஹஃபீஸ் மாமூன் அச்சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். எங்கே இவ்விஷயத்தை அச்சிறுமி யாரிடமாவது சொல்லி விடுவாளோ என்று பயந்த மவுலானா ஹஃபீஸ் மாமூன், மறுநாள் முழுவதும் அச்சிறுமியை மதரஸாவை விட்டு வெளியே விடவில்லை. எனினும், ஜனவரி 30-ம் தேதி அச்சிறுமி மதரஸாவிலிருந்து தப்பி வெளியே சென்றிருக்கிறார். அப்போது, அவ்வழியாக வந்த ஒருவரின் செல்போனை இரவல் வாங்கி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தந்தையிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, அச்சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் ஆயிஷா மசூதிக்கு வந்து ஹஃபீஸ் மாமூனிடம் விசாரித்திருக்கிறார்கள். அதற்கு, இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும், விஷயம் வெளியே தெரிந்தால் மதரஸாவை இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்படும் என்று கூறியிருக்கிறார். ஆனாலும், அச்சிறுமியின் தந்தை ஹஃபீஸ் மீது லோனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மவுலானா ஹஃபீஸ் மாமுனை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் மதரஸாவில் தங்கி இஸ்லாமியக் கல்வி பயிலும் சிறுமிகள் மற்றும் சிறுவர்கள், இதுபோன்ற மவுலானாக்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இவற்றில் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே போலீஸ் புகார் என்று வெளிச்சத்துக்கு வருகிறது. ஆனால், போலீஸில் புகார் அளித்தால் மதரஸாவுக்கும், மசூதிக்கும் சிக்கல் ஏற்படும் என்பதால், இதனால், மதத்துக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதாலும், ஏராளமானோர் கட்டப்பஞ்சாயத்து மூலம் விஷயம் வெளியில் வராமல் முடித்து விடுகின்றனர் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.