உ.பி. சிறுமி கேரளாவில் பலாத்காரம்: ஷகீல், ஆலம், அஜாஜ், இர்ஷாத் கைது!

உ.பி. சிறுமி கேரளாவில் பலாத்காரம்: ஷகீல், ஆலம், அஜாஜ், இர்ஷாத் கைது!

Share it if you like it

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியை கேரளாவுக்குக் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, எஸ்கேப்பான ஷகீல் ஷா, இக்ரார் ஆலம், அஜ்ஜா, இர்ஷாத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரது சகோதரி ஒருவர், சென்னையில் வசித்து வருகிறார். அந்த சகோதரியை பார்க்க விரும்பிய சிறுமி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் சொல்லி விட்டு, வாரணாசியிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்திருக்கிறார். இச்சிறுமி பயணம் செய்த அதே ரயில் பெட்டியில் ஷகீல் ஷா, அஜாஜ், இர்ஷாத், இக்ரார் ஆலம் ஆகிய 4 இளைஞர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். நீண்ட நேர ரயில் பயணம் என்பதால், 4 இளைஞர்களும் சிறுமியிடம் நட்பாக பேசி வந்திருக்கிறார்கள்.

இந்த சூழலில், ரயில் சென்னையை வந்தடைந்ததும், அச்சிறுமி ரயிலில் இருந்து இறங்க முயற்சித்திருக்கிறார். ஆனால், மேற்கண்ட 4 இளைஞர்களும் சேர்ந்து சிறுமியை இறங்கவிடாமல் தடுத்ததோடு, கேரளாவுக்கு கடத்திச் சென்றிருக்கிறார்கள். பாலக்காடு ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அவர்கள், அச்சிறுமியை கோழிக்கோடு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து, 4 பேரும் சேர்ந்து அச்சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். பின்னர், அச்சிறுமியை கோழிக்கோடு ரயில் நிலையத்திற்குக் கொண்டு சென்று விட்டு விட்டு எஸ்கேப்பாகி விட்டனர்.

கோழிக்கோடு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அச்சிறுமியை அழுது கொண்டே நின்றிருக்கிறார்கள். இதைப் பார்த்த அப்பகுதி போலீஸ் எஸ்.ஐ. அபர்ணா, சிறுமியிடம் விசாரித்திருக்கிறார். அப்போது, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அச்சிறுமி அழுது கொண்டே கூறியிருக்கிறார். பின்னர், அச்சிறுமியை கசாபா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார் எஸ்.ஐ. அபர்ணா. பின்னர், தனக்கு நேர்ந்த கொடுமையை அச்சிறுமி போலீஸாரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இக்ரார் ஆலம், அஜாஜ், இர்ஷாத், ஷகீல் ஷா ஆகியோர்தான் குற்றவாளிகள் என்பது அடையாளம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Share it if you like it