குப்பையில் மோடி, யோகி போட்டோ: மாநகராட்சி ஊழியர் டிஸ்மிஸ்!

குப்பையில் மோடி, யோகி போட்டோ: மாநகராட்சி ஊழியர் டிஸ்மிஸ்!

Share it if you like it

உத்தரப் பிரதேசத்தில், குப்பைத் தொட்டியில் போடப்பட்ட  பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் போட்டோவை குப்பை வண்டியில் வைத்துக் கொண்டு சென்ற மாநகராட்சி ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. யோகியின் அதிரடி நடவடிக்கைகளால் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தவறு செய்ய முடியவில்லை. மேலும், தங்கள் இஷ்டப்படி செயல்பட முடியவில்லை. இதனால், அடிப்படைவாதிகள் முதல்வர் யோகி மற்றும் பிரதமர் மோடி மீது அதிருப்தி மற்றும் ஆத்திரத்தில் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக, சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அடிப்படைவாதிகள் ஒன்றிணைந்து வன்முறை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், உ.பி. மாநிலம் மதுராவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரது போட்டோக்களை யாரோ குப்பையில் வீசி இருக்கிறார்கள். இப்படி வீசப்பட்ட போட்டோக்களை, குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்து குப்பை வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார் மாநகராட்சி ஊழியர் ஒருவர். அப்போது, அந்த வழியாக புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிலர், யோகி, மோடி, அப்துல் கலாம் ஆகியோரது போட்டோக்களை எடுத்து சுத்தம் செய்து, தங்களுடன் எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

அதேசமயம், இந்த சம்பவத்தை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதையடுத்து, மேற்கண்ட காணொளி வைரலானது. இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள், யோகி, மோடி, அப்துல் கலாம் ஆகியோரின் போட்டோக்களை குப்பை வண்டியில் வைத்து தள்ளி வந்த மாநகராட்சி ஊழியரை, அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து விட்டனர்.


Share it if you like it