உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் தேசியகீதத்தை அவமரியாதை செய்த அட்னானை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். ருஹால் என்பவனை தேடிவருகின்றனர்.
நமது பாரத தேசத்தின் 74-வது குடியரசு தினம் கடந்த 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றையதினம் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த 2 முஸ்லிம் இளைஞர்கள் தேசியகீதத்தை அவமரியாதை செய்தனர். அதாவது, 29 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பின்னணியில் தேசியகீதம் இசைக்கப்படுகிறது. அப்போது, கருப்பு நிற ஜாக்கெட், ஜீன்ஸ் அணிந்த ஒருவன் முதல் 8 வினாடிகள் சல்யூட் அடித்து தேசியகீதத்துக்கு மரியாதை செலுத்துவதுபோல செய்கிறான். பிறகு, தேசியகீதத்தை அவமதிக்கும் வகையில், அருவெறுப்பாக ஆபாசமாக நடனமாடுகிறான். இதை அருகில் நின்று ஒருவன் சிரித்து ரசித்துக் கொண்டிருக்கிறான். அருகில் மேலும் சிலர் நிற்கின்றனர். ஆனால், அவர்களின் சத்தம் மட்டும் கேட்கிறதே தவிர, உருவம் தெரியவில்லை. இந்த காட்சிகளை மற்றொருவன் வீடியோவாக பதிவு செய்கிறான்.
பின்னர், இந்த வீடியோவை திமிராக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்த பலரும், தங்களது கண்டனங்களை பதிவு செய்ததோடு, மேற்கண்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் முன்னாள் நகரத் தலைவர் சச்சின் சிரோஹி, இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல் என்றும், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இதுகுறித்து மீரட் இத்கா பகுதி ரயில்வே ரோடு காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தேசியகீதம் இசைக்கப்படும்போது ஆபாச நடனமாடியது மீரட்டிலுள்ள இத்கா பகுதியைச் சேர்ந்த ருஹால் என்பதும், அதை பார்த்து ரசித்து சிரிப்பது அட்னான் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஸ்பாட்டுக்குச் சென்ற போலீஸார் அட்னானை கைது செய்தனர். ஆனால், தகவலறிந்த ருஹால் தப்பி ஓடிவிட்டான். அவனை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முஸ்லீம் இளைஞர்கள் தேசியகீதத்தை அவமதித்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு, முஸ்லீம் இளைஞர்களின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.