மோடி, யோகிக்கு ஆதரவு: மனைவிக்கு முத்தலாக்!

மோடி, யோகிக்கு ஆதரவு: மனைவிக்கு முத்தலாக்!

Share it if you like it

பாரத பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு ஆதரவாக பேசியதற்காக, முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த நபரிடம், போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

2014-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க., 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதையடுத்து, பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தது மோடி அரசு. அந்த வகையில், முத்தலாக் விவாகரத்தால் இஸ்லாமிய பெண்கள் படும் துயரத்தை கவனத்தில் கொண்டு, முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தார். இது இஸ்லாமிய பெண்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேசமயம், இஸ்லாமிய அடிப்படைவாத ஆண்கள் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியது.

இது ஒருபுறம் இருக்க, முத்தலாக் தடைச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தபோதிலும், நாடு முழுவதும் ஆங்காங்கே முத்தலாக் கூறி இஸ்லாமிய பெண்களை விவாகரத்து செய்யும் கொடுமை அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. முத்தலாக் தடைச் சட்டத்தின்படி, மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்தால், கணவருக்கு 3 ஆண்டுவரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். ஆகவே, முத்தலாக் மூலம் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்கள், பிரதமர் மோடி மூலமும், மத்திய அரசு மூலமும் தீர்வு தேடி வருகின்றனர். மேலும், பல இஸ்லாமிய பெண்கள் நேரடியாகவே போலீஸில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மற்றொரு முத்தலாக் விவாகரத்து சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், பாரத பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு ஆதரவாக பேசியதற்காக, மனைவியை முத்தலாக் மூலம் கணவர் விவாகரத்து செய்திருப்பதுதான். உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டம் பீர்ஷதா கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது நசீம். இவருக்கும், ஷனா இராம் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஷனா இராம், பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது.

எனவே, வழக்கம்போல மோடி மற்றும் யோகி ஆகியோர் எடுக்கும் நடவடிக்கைகள், நல்ல திட்டங்கள் பற்றி அவ்வப்போது பெருமையாக பேசி வந்திருக்கிறார். இது முகமது நசீமுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக, கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த சூழலில், நடந்து முடிந்த தேர்தல்களில் ஷனா இராம், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் நசீம், ஷனா இராமை அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாகத் தெரிகிறது. மேலும், நசீமின் பெற்றோரும் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.

இதனால் மனமுடைந்த ஷனா இராம், கடந்த மார்ச் 3-ம் தேதி தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸில் புகார் செய்தார். இப்புகார் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான், முகமது நசீம், திடீரென தனது மனைவி ஷனா இராமுக்கு முத்தலாக் மூலம் விவாகரத்து கொடுத்து, வீட்டை விட்டு வெளியேறும்படி சொல்லி விரட்டி இருக்கிறார். இது குறித்தும் ஷனா போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, நசீம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இச்சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

The Triple Talaq Bill and BJP's Selective Concern for Muslim Women
முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடும் இஸ்லாமிய பெண்கள் (கோப்புப்படம்).

Share it if you like it