சிவலிங்கம் மீது சிறுநீர் கழிப்பு: சோயப் கைது!

சிவலிங்கம் மீது சிறுநீர் கழிப்பு: சோயப் கைது!

Share it if you like it

உத்தரப் பிரதேசத்தில் சிவலிங்கத்தின் மீது சிறுநீர் கழித்த, முகமது சோயப் என்பவனை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் சரூர்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது ரஸ்னா கிராமம். இங்கு சிவன் கோயில் ஒன்று இருக்கிறது. கடந்த 18-ம் தேதி காலையில் வழக்கம் போல பூஜை நடத்துவதற்காக பூசாரிகள் கோயிலுக்கு வந்திருக்கிறார்கள். அப்போது, கோயிலின் கதவு திறந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த பூசாரிகள், அதே கிராமத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தெரிந்த மோஹித் என்கிற இளைஞரை வரவழைத்து சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆராய்ந்திருக்கிறார்கள்.

அப்போது, அதே ஊரைச் சேர்ந்த முகமது சோயப் என்பவன் கோயில் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைவதும், சிவலிங்கத்தின் மீது சிறுநீர் கழிப்பதும் கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வீடியோ காட்சிகளின் அடிப்படையில், கோயில் பூசாரிகள் சரூர்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து முகமது சோயப்பை கைது செய்தனர். சிவலிங்கத்தின் மீது முகமது சோயப் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு ஹிந்துக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள், ஹிந்து கோயில்களை அடித்து நொறுக்குவதும், கோயிலுக்குள் இறைச்சித் துண்டுகளை வீசிச் செல்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அதேபோல, சிவலிங்கத்தின் மீது சிறுநீர் கழிப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே, 2019-ம் ஆண்டு ஜஹாங்கிராபாத்திலுள்ள மகாதேவ் கோயிலுக்குள் இரானி என்கிற இர்ஷாத் என்பவன் புகுந்து சிறுநீர் கழித்து அவமானப்படுத்தினான். பஜ்ரங்தள் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் புலந்த்ஷாஹர் போலீஸார் அவனை கைது செய்தனர். 2021-ம் ஆண்டு ஆசிப் என்பவன் சிவலிங்கத்தின் மீது சிறுநீர் கழித்து கைது செய்யப்பட்டான்.


Share it if you like it