ஞானவாபி மசூதிக்குள் சிவலிங்கம்!

ஞானவாபி மசூதிக்குள் சிவலிங்கம்!

Share it if you like it

ஞானவாபி மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக ஆய்வு நடத்திய வக்கீல்கள் தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. இந்த வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. இங்கு தினசரி பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1991-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிங்கார கவுரி அம்மனுக்கு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆகவே, அம்மனுக்கு அன்றாடம் பூஜை நடத்த அனுமதிக்க கோரி, டெல்லியைச் சேர்ந்த ராக்கி சிங், லக்ஷ்மி தேவி, சீதா சாஹு உள்ளிட்ட 5 பெண்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும், ஞானவாபி மசூதி ஹந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாகவும், உள்ளே ஹிந்து கோயில் இருப்பதாகவும் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, வழக்கறிஞர்கள் குழு ஒன்றை நியமித்து கோர்ட், மே 14, 15, 16 ஆகிய தேதிகளில் மசூதியில் ஆய்வு நடத்தி 17-ம் தேதி அறிக்கை தாக்கும் செய்யும்படி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர்கள் குழு 3 நாட்களாக ஆய்வு நடத்தியது. மசூதிக்குள் ஆய்வு நடத்திய காட்சிகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டன. இந்த ஆய்வு இன்று காலை 11 மணியுடன் நிறைவடைந்திருக்கும் நிலையில், மசூதிக்குள் இருக்கும் குளத்திலுள்ள கிணற்றிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் கூறுகையில், கிணற்றுக்குள் ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது 12 அடி உயரம் 8 அங்குல விட்டம் கொண்டது. இதன் பாதுகாப்புக் கோரி சிவில் நீதிமன்றத்திற்குச் செல்விருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஞானவாபி மசூதி வளாகத்தின் மேற்குச் சுவரில் ஹிந்துக் கோயில் இடிப்பின் எச்சங்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது, மிகப்பெரிய சான்றாக இருக்கும் என்கிறார்கள். அதேசமயம் மசூதி நிர்வாகமோ, சிருங்கர் கௌரியின் சிலை வெளியே மசூதியின் மேற்குச் சுவரில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.


Share it if you like it