சல்மான் கான், ஷாருக் கான் ரகசியம்: பாபா ராம்தேவ் பேச்சால் பரபரப்பு!

சல்மான் கான், ஷாருக் கான் ரகசியம்: பாபா ராம்தேவ் பேச்சால் பரபரப்பு!

Share it if you like it

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஒரு போதை ஆசாமி என்று யோகா குரு பாபா ராம்தேவ் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் ஆர்யவீரன் மற்றும் வீராங்கனை மாநாட்டு கடந்த 15-ம் தேதி நடந்தது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய யோகா குரு பாபா ராம் தேவ், “திரையுலகம் முழுவதும் போதை இருக்கிறது. நடிகர் சல்மான் கான் போதைப் பொருள் உட்கொள்கிறார். அதேபோல, ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பிடிபட்டு சிறையில் இருந்தார். அமீர்கானை பற்றி எனக்குத் தெரியாது. நடிகைகளை பொறுத்தவரை, கடவுள் ஒருவரால் மட்டுமே அவர்களை பற்றி அறிய முடியும்.

அதேபோல, அரசியலிலும் போதை இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மது வினியோகம் செய்யப்படுகிறது. போதையில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்று தீர்மானம் எடுக்க வேண்டும். இதற்காக இயக்கம் நடத்துவோம்” என்று கூறியிருக்கிறார். சல்மான் கான் பற்றியும், ஷாருக்கான் பற்றியும் பாபா ராம்தேவ் இவ்வாறு பேசியிருப்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


Share it if you like it