வடிவேலு, தேவாவிற்கு போலி டாக்டர் பட்டம்: காவல்துறையில் புகார்?

வடிவேலு, தேவாவிற்கு போலி டாக்டர் பட்டம்: காவல்துறையில் புகார்?

Share it if you like it

நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் போலி என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் போலியாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்தவகையில், இந்த அமைப்பின் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், நடன இயக்குனர் சாண்டி, ஈரோடு மகேஷ், நடிகர் வடிவேலு, பிரபல யூ டியூப்பர்ஸ் கோபி – சுதாகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட டாக்டர். பட்டத்திற்கும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அக்கல்லூரியின் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து, பத்திரிகையாளர்களிடம் அவர் கூறும் போது இவ்வாறு பேசினார் ;

அண்ணா பல்கலைக்கழக பெயரில் போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது தொடர்பாக காவல் துறையில் புகாரளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதியை ஏமாற்றி, அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றி உள்ளனர். ஆளுநர் செயலாளர், உயர்கல்வித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகையும், அரசும் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என கூறியுள்ளார்.


Share it if you like it