தி.மு.க. கூட்டணியில் உள்ள வி.சி.க. மற்றும் ம.தி.மு.க. இடையே மோதல் ஏற்பட்டு இருப்பது கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வி.சி.க. தலைவர் திருமாவளவன். இவர், அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், எம்.ஜி.ஆரைத் தவிர்த்து தமிழகத்தை சேர்ந்த எந்த தலைவர்களையும் பிரபாகரன் நம்பவில்லை என்று கூறியிருந்தார். இதனிடையே, ம.தி.மு.க. தலைவர் வைகோ-வின் பெயரை நெறியாளர் சுட்டிக்காட்டினார். எனினும், இதற்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதில் கூறாமல் மெளனம் காத்தார்.
இதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, ம.தி.மு.க. தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “விடுதலைப் புலிகளை ஆதரித்ததால் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பல இழப்புகளை சந்தித்தவர் வைகோ. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 577 நாள்கள் வேலூர் சிறையில் வாடியவர். பொத்தம் பொதுவாக தமிழ்நாட்டு தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்னையில் அரசியல் செய்தார்கள் என திருமாவளவன் கூறியது ஏற்புடையது அல்ல என்று ம.தி.மு.க. தக்க பதிலடியை கொடுத்துள்ளது.