பாரதியை இகழ்ந்த தமிழக எம்.பி.: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பாரதியை இகழ்ந்த தமிழக எம்.பி.: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

மகாக்கவி பாரதியாரை இகழ்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ரவிக்குமார் பதிவிட்டிருப்பது தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாகவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தமிழர்கள், ஹிந்துக்கள், ஹிந்து அமைப்புகள், ஹிந்து கடவுள்களை உள்ளிட்டவற்றை விமர்சனம் செய்து வருகின்றனர். அதேசமயம், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம், சிறுபான்மையினர் ஆதரவு என்கிற பெயரில் அச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆதாயம் அடைவதுதான். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கியத் தலைவர்களான திருமாவளவன், வன்னியரசு உள்ளிட்ட பலரும் மதம் மாறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை சில தொலைக்காட்சி பேட்டிகளில் திருமாவளவன் ஆமோதித்தும் இருக்கிறார். இதனால், அச்சமூகத்திலுள்ள ஹிந்து மத பற்றாளர்கள், திருமாவளவனுக்கு எதிராக இயக்கங்களை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில்தான், ஹிந்து மத வெறுப்பையும் தாண்டி தற்போது தமிழர்கள் மீதான வெறுப்பையும் உமிழத் தொடங்கி இருக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். அந்த வகையில், மகாக்கவி பாரதியாரின் கவிதையையே குறைசொல்லி பதிவிட்டிருக்கிறார் அக்கட்சியின் எம்.பி.யான ரவிக்குமார். இவர், தன்னை ஒரு எழுத்தாளர் என்று பிரகடணப்படுத்திக் கொள்பவர். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “பாரதியின் முரண்பட்ட முகங்களைக் கண்ணன் பாடல்களில் பார்க்கலாம். ‘கண்ணன் என் அரசன்’ பாடல் அவருள்ளிருந்த அதி மனிதன் (super man) குறித்த ஆர்வத்தை மட்டுமல்ல, ‘அதிகாரத்துவம்’ பற்றிய விருப்பத்தையும் காட்டுகிறது. ‘கண்ணன் என் ஆண்டான்’ பாடலைப் படிக்கும்போது அவ்வளவு ஆத்திரம் வருகிறது. ‘பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்று பாடிய சங்கக் கவிஞன் கணியன் பூங்குன்றனின் நவீனத்துவப் பார்வை பாரதியின் கண்ணன் பாடல்களில் வெளிப்படவில்லை” என்று ரவிக்குமார் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழர்களும், தமிழ் ஆர்வலர்களும், ரவிக்குமாருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ரவிக்குமாரின் பதிவில் பின்னுட்டமிட்டிருக்கும் ஒருவர், “உங்க புத்தியிலதான் கேடு இருக்கு. அதான் எதைப் பார்த்தாலும் தப்பா தெரியுது உங்களுக்கு. அது சரி, எது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கு, எது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்குன்னு தெரியாம பாராளுமன்றத்தில் அசிங்கப்பட்டது நீங்க தானே? உங்களுக்கு பாரதியை பற்றி பேச என்ன தகுதி இருக்கு” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இன்னொருவர், “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் முரண்பட்ட கருத்துள்ளோர் பாரதியை விமர்சனம் செய்கின்றனர்! மனதில் பட்டதை தைரியமாக கூறுபவரை கட்டி வைத்து உதைத்து அந்தமான் சிறையிலடைத்த சட்டம் அன்று இருந்தது. நமக்கு இப்போதுள்ள PCR Act போன்ற அரண் அவருக்கு இல்லை. இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம்” என்று கமென்ட் செய்திருக்கிறார்.

மற்றொருவரோ, “எனக்கு கூட அம்பேத்கர் சட்டம் சுத்தமாக பிடிக்கவில்லை.. பொது சிவில் சட்டம் வேண்டும் என்று இப்போது வலுவாக தோன்றுகிறது.. கொண்டு வரப்பட உள்ள பொது சிவில் சட்டத்தில் தனித் தொகுதிகள் நீக்கப்பட வேண்டும். இரவல் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்று மாற்றம் கொண்டு வர வேண்டும்” என்று ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றதை குத்திக்காட்டி இருக்கிறார். அதேபோல, “ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக் கொண்டு, மகாகவியை விமர்சிப்பது, உங்கள் மனதில் உள்ள ஜாதிய வன்மத்தை காட்டுகிறது.. சமூக நீதி பேச தகுதி இழக்கிறீர்கள்” என்று மற்றொருவர் பதிவிட்டிருக்கிறார். ஆக, மகாக்கவியை குறைசொல்லும் அளவுக்கு தான் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ள முயற்சித்திருக்கும் ரவிக்குமாரை, நெட்டிசன்கள் வச்சு செய்து வருகிறார்கள்.


Share it if you like it