சின்னத்திரை நடிகையும் வி.சி.க-வின் தீவிர ஆதரவாளருமான டாக்டர் ஷர்மிளா அவர்கள் பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீதும் தொடர்ந்து மிக கடுமையாக விமர்சனம் செய்வதையே இன்று வரை வாடிக்கையாக கொண்டவர். பிரபல இணையதளமான கதிர் நியூஸ் செய்தி வெளியிட்டு இருந்ததாக அண்மையில் செய்தி வெளியிட்டு இருந்தார் ஷர்மிளா இது பொய் செய்தி என்று கதிர் நியூஸ் மறுப்பு செய்தி வெளியிட்டு உண்மை செய்தியை தமிழக மக்களுக்கு தெரிவித்து இருந்தது.
மிகப் பெரிய பொறுப்பில் உள்ள பாரதப் பிரதமர் மோடியை இவன் என்று ஒருமையில் அழைத்த நடிகை ஷர்மிளாவிற்கு பலரும் தங்களது கடும் கண்டனத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். கருத்து வேறுபாடு, கட்சி வேறுபாடு, இருக்கலாம் பிரதமரை விமர்சனம் செய்தது கடும் கண்டனத்திற்குறியது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக பெண்கள் குறித்தும், நடிகைகள் குறித்தும் மிக கீழ்த்தராமக விமர்சனம் செய்த திருமா கட்சியை சேர்ந்தவர்கள் இப்படி தான் பேசுவார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


