காவலர்களை இழிவாக பேசிய வி.சி.க. நிர்வாகியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், அடங்கமறு, அத்துமீறு, திமிரி எழு, ( சமயம் பார்த்து காலில் விழு ) என்று பேச கூடியவர். ஒரு நல்ல தலைவராக இருந்து பட்டியல் சமூக மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய இடத்தில் இருப்பவர் திருமாவளவன். எனினும், அதனையெல்லாம் மறந்து விட்டு, தி.மு.க.விடம் கொத்தடிமையாக இருந்து வருகிறார்.
விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் சுயமரியாதைகாரர்கள், தன்மானம் மிக்கவர்கள் என்று பேசுவார். நீ, முழுமையான விடுதலை சிறுத்தையாக இருக்க வேண்டுமானால், உன் மீது குறைந்தது 10 வழக்காவது பதிவாகி இருக்க வேண்டும் என்று அண்மையில் கூறியிருந்தார். தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பதற்கு ஏற்ப வி.சி.க. நிர்வாகிகளின் ஆட்டூழியங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது.
அந்தவகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இடம் தொடர்பான (கட்டப்பஞ்சாயத்து) பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம், ஆரணி காவல் நிலையத்தில் நடந்து வந்தது. அந்தவகையில், வி.சி.க.வின் மாவட்ட செயலாளர் மா.கு.பாஸ்கரன் காவல் நிலையத்திற்குள் புகுந்து பணியில் இருந்த எஸ்.ஐ. கிருஷ்ண மூர்த்தியை ஜாதியின் பெயரை சொல்லியும், அருவருக்கதக்க வகையில் ஒருமையில் திட்டியிருக்கிறார்.
காவல்நிலையத்தில் அடாவடி செய்தல், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடை செய்தல் மற்றும் ஆபாசமாக திட்டியது தொடர்பாக மா.கு.பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை அன்று அவருக்கு ஜாமின் கிடைத்தது. இதனை தொடர்ந்து, மா.கு.பாஸ்கரன் தனது ஆதரவாளர்கள் புடை சூழ திறந்த காரில் ஊர்வலமாக சென்றார். அப்போது, ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் காவலர்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து, பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மா.கு.பாஸ்கரனின் செயலை கடுமையாக கண்டித்து இருந்தனர். இதையடுத்து, வி.சி.க. மாவட்ட செயலாளர் தலைமறைவானர். இதனை தொடர்ந்து, .பாஸ்கரனை கைது செய்ய வேண்டி 7 தனிப்படைகளை காவல்துறை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.