கல்லூரிக்குள் புகுந்து மாணவர்கள் மீது வி.சி.க. நிர்வாகி திடீர் தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், அடங்கமறு, அத்துமீறு, திமிரி எழு, ( சமயம் பார்த்து காலில் விழு ) என பேச கூடியவர். ஒரு நல்ல தலைவராக இல்லாமல் அப்பாவி இளைஞர்களின் மனதில் விஷத்தை திணித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு.
இதனிடையே, தனது கட்சி தொண்டர்களிடம் அண்மையில் உரையாற்றும் போது இவ்வாறு பேசினார் ; முழுமையான விடுதலை சிறுத்தையாக இருக்க வேண்டுமானால், உன் மீது குறைந்தது 10 வழக்காவது பதிவாகி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். திருமாவின் இந்த கருத்து பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இப்படியாக, பொறுப்பற்ற முறையில் திருமாவின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், நாகை மாவட்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் மீது வி.சி.க. நிர்வாகி தனது அடியாட்களுடன் சென்று திடீர் தாக்குதல் நடத்தியிருக்கிறார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.