பிறந்த நாளா… நினைவு நாளா… குழம்பி நின்ற வி.சி.க. தலைவர்!

பிறந்த நாளா… நினைவு நாளா… குழம்பி நின்ற வி.சி.க. தலைவர்!

Share it if you like it

சி.பா. ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் குழப்பத்துடன் திருமாவளவனின் பேச முயன்ற சம்பவம் மக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்டவர் சி.பா. ஆதித்தனார். இவர், இதழியலின் முன்னோடியாக திகழ்ந்தவர். இன்றைய, முன்னணி நாளிதழ்களில் ஒன்றாக திகழும் தினத்தந்தி நாளிதழைத் தொடங்கியவர். மேலும், தமிழக அரசியல் வானில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர். இதுதவிர, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். தமிழ் மொழி மீதும், பாரத தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் விதமாக நாம் தமிழர் எனும் கட்சி தொடங்கியவர். மகாத்மா காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரம் அடைய துவங்கிய போது தனது கட்சியின் செயற்பாட்டை திடீரென நிறுத்தினார்.

இப்படியாக, இவரது சாதனைகளை சொல்லி கொண்டே செல்ல முடியும். தமிழக மக்களால் அன்புடன் தமிழர் தந்தை என அழைக்கப்பட்டார். இவர், கடந்த 1905 – ஆம் ஆண்டு செப்டம்பர் 27 – ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயா மொழியில் சிவந்தி ஆதித்தர் மற்றும் கனகம் அம்மையார் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். அந்த வகையில், இன்றைய தினம் அவரது 118-வது பிறந்த நாள் விழா ஆகும்.

இதையடுத்து, அவரது பிறந்த நாள் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு ‘தினத்தந்தி’ குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், என பலர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் சி.பா. ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவிக்க சென்று இருக்கிறார். இதையடுத்து, அவரது சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பத்திரிகையாளர்களை திருமாவளவன் சந்தித்துள்ளார். அப்போது, அவர் பேச முற்படுகையில், இன்றைய தினம் சி.பா. ஆதித்தனாரின் பிறந்த நாளா அல்லது நினைவு நாளா என்று தெரியாமல் குழப்பமடைந்து இருக்கிறார். இதையடுத்து, தம்மோடு வந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட பின்பு அவர் பேச முயன்ற சம்பவம் தான் பலரின் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 118 – வது பிறந்தநாள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை


Share it if you like it