ஆஹா… இதுவல்லவோ கட்சி: திருமாவின் ஆசையை தொடர்ந்து நிறைவேற்றி வரும் வி.சி.க. நிர்வாகி!

ஆஹா… இதுவல்லவோ கட்சி: திருமாவின் ஆசையை தொடர்ந்து நிறைவேற்றி வரும் வி.சி.க. நிர்வாகி!

Share it if you like it

முழுமையான விடுதலை சிறுத்தையாக இருக்க வேண்டுமானால் உன் மீது குறைந்தது 10 வழக்காவது பதிவு ஆக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் அண்மையில் கூறியிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக வி.சி.க. நிர்வாகியின் செயல்பாடு அமைந்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், அடங்கமறு, அத்துமீறு, திமிரி எழு, ( சமயம் பார்த்து காலில் விழு ) என பேச கூடியவர். நல்ல தலைவராக இருக்க வேண்டிய இவர் அப்பாவி பட்டியல் சமூக மக்களின் உள்ளங்களில் விஷயத்தை திணித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் சுயமரியாதைகாரர்கள், தன்மானம் மிக்கவர்கள் என்று பேசுவார். அதே வேளையில், தி.மு.க.விடம் அசிங்கப்படுவதையும், அவமதிக்கப்படுவதையும் கண்டும் காணாமல் கடந்து சென்று விடுவார்.

இதனிடையே, தனது கட்சி தொண்டர்களிடம் அண்மையில் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் ; முழுமையான விடுதலை சிறுத்தையாக இருக்க வேண்டுமானால், உன் மீது குறைந்தது 10 வழக்காவது பதிவாகி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். திருமாவின் இந்த கருத்து பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இதனிடையே, வி.சி.க.வின் லத்தூர் ஒன்றிய செயலாளராக இருப்பவர் மணிமாறன். இவர், செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர். இவர், அப்பள்ளியில் பயின்று வந்த 8-ம் வகுப்பை சேர்ந்த மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர். அந்த வகையில், அவர், மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகம் தலை காட்டாமல் மணிமாறன் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார்.

இப்படிப்பட்ட சூழலில், சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது பேசிய திருமா, “தமிழ்நாட்டை தனி நாடாக அமைப்பதே தமிழ் தேசியத்தின் இலக்கு” என்று தெரிவித்து இருந்தார். இதற்கு, எதிர்வினை ஆற்றும் விதமாக தமிழகத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் குருமூர்த்தி தனது கடும் கண்டனத்தை காணொளி மூலம் திருமாவிற்கு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சி.ஆர்.பி.எப். வீரரை போன் மூலம் தொடர்பு கொண்ட மணிமாறன். அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், உனது குடும்பத்தாரை ‘பாம் போட்டு கொன்று விடுவோம்’ என்ற ரீதியில் மிரட்டி இருந்தார். வி.சி.க. நிர்வாகி மிரட்டிய ஆடியோவினை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். ஏற்கனவே, இவர் மீது ’போக்சோ’ உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில், வி.சி.க. நிர்வாகி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் மணிமாறனுக்கு வி.சி.க. தலைவர் திருமா தனது தலைமையில் பாராட்டு விழாவினை நடத்த வேண்டும் என நெட்டிசன்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


Share it if you like it