சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், பா.ம.க. மற்றும் பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது. இப்படிச் சொல்வதற்கு இந்தியாவி்ல் எந்தக் கட்சிக்காவது தைரியம் இருக்கிறதா என்று ஆவேசமாகப் பேசியிருந்தார். இந்த சூழலில், திருமாவளவன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று பேசியிருந்த வீடியோவை நெட்டிசன்கள் வெளியிட்டு, ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், திருமாவளவன் உங்க பேச்சை கடலில்தான் எழுத வேண்டும். நீங்கள் சொன்னதை எப்போது செய்திருக்கிறீர்கள் என்று கிண்டலடித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று திருமாவளவன் பேசிய வீடியோ இதோ…