முத்தலாக் சட்டம் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முத்தலாக்கை ஆதரித்து பேசியிருப்பதோடு, ஹிந்து பெண்களுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய வகையில் உளறிக் கொட்டியது கடும் விமர்சனத்தைக் கிளப்பி இருக்கிறது.
நிகழ்ச்சி ஒன்றியில் பேசிய திருமாவளவன், “தம்பதிக்களுக்கு இடையே கருத்து வேறுபாடு என்றால், உடனடியாகப் பிரிந்து சென்று விட வேண்டும். ஆனால், ஹிந்து மதத்தில் அப்படி இல்லை. தாலி கட்டி விட்டால் போதும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று இருக்க வேண்டும். அவன் அடித்தாலும், உதைத்தாலும் வாங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அதேபோலதான் கிறிஸ்தவ மதத்திலும். டைவர்ஸ் வாங்குவது என்பது மிகவும் சிரமமான காரியம். ஆனால், முஸ்லீம் மதத்தில் மட்டும்தான் முத்தலாக் என்கிற நடைமுறை இருக்கிறது. பிடிக்கவில்லையா, உடனே தலாக், தலாக், தலாக் என்று 3 முறை கூறிவிட்டால் போதும். உடனே, விவாகரத்தாகி விடும் என்று கூறியிருக்கிறார்.
திருமாவளவனின் இந்த கருத்துதான் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. முத்தலாக்கை திருமாவளவன் ஆதரிக்கிறாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஹிந்து, கிறிஸ்தவ மதத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற நடைமுறைதான் இருந்து வருகிறது. அப்படி இருக்க, முஸ்லீம்களை போல முத்தலாக் கூறிவிட்டு, எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்கிறாரா திருமா என்று கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், பெண்களும் முத்தலாக் கூறிவிட்டு வேறொரு ஆணை திருமணம் செய்து கொள்ளலாமா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.