வீரமங்கை வேலு நாச்சியார் : பார் போற்றும் பாரதப் பெண்மையும் வீரம் செறிந்த அடையாளம் !

வீரமங்கை வேலு நாச்சியார் : பார் போற்றும் பாரதப் பெண்மையும் வீரம் செறிந்த அடையாளம் !

Share it if you like it

இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி – முத்தாத்தாள் நாச்சியார் தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தை வேலு நாச்சியார். அரசகுலத்தில் செல்ல மகளாக பிறந்தவள் செல்விகமாக இளவரசியாக அரண்மனையில் அனைவரது உள்ளங்கையிலும் ஏந்தி வளர்க்கப்பட்டார் .
மறுபுறம் தேசத்தையும் தர்மத்தையும் காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கும் தன்னுடைய மகளை செல்ல மகள் என்று பலவீனப்படுத்தாமல் தேசம் காக்க பிறந்த சத்திரிய குலமகள் என்ற உணர்வோடு ஆணுக்கு நிகராக அத்தனை போர்க்கலைகள் கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கும்படியான ஒரு ஆளுமை மிக்க பெண் அரசியாகவே செல்லமுத்து சேதுபதி வளர்த்தெடுத்தார்.
தேசியம் தெய்வீகமும் என்ற உணர்வு குடி கொண்டாலே அங்கு முயற்சிகள் யாவும் வெற்றி பெறும் என்னும் உயர்ந்த நியதிக்கு ஏற்ப செல்லமுத்து சேதுபதியாரின் உழைப்பும் முயற்சியும் தேசம் காக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையும் சிந்தாமல் சிதறாமல் வேலு நாச்சியாரை அக அழகிலும் புற அழகிலும் தேர்ந்த ஒரு வீர மங்கையாக வார்த்தெடுத்தது.

நல்ல கல்வி திறமை பன்மொழிப் புலமை எதையும் கூர்நோக்கி ஆய்ந்து தொலைநோக்கு சிந்தனையில் முடிவெடுக்கும் சாதுர்யம் வாளேந்தி போர்க்களம் புகுந்து யுத்தத்தையும் எதிர்கொள்ளும் வல்லமை தலைமை ஏற்று படைகளை வழிநடத்தும் பேராளுமை என்று ஒரு கட்டத்தில் வேலு நாச்சியார் தனது தந்தையும் வழிகாட்டியுமான செல்லமுத்து சேதுபதி யாரையே மிஞ்சிய திறமையாளராக வீரம் செறிந்தவராக மிளிர தொடங்கினார்.

அன்றைய காலகட்டத்தில் தென்னிந்தியாவில் ஆற்காட்டு நவாப் வம்சத்தின் கை ஓங்கி இருந்தது. அவர்களின் குடும்பத்திற்குள் ஏற்பட்ட வாரிசு சண்டை காரணமாக சில காலம் தென்னிந்திய அளவில் ஒரு தற்காலிக அமைதி நிலவினாலும் சந்தா சாகிப் -முகமது அலி உள்ளிட்டவர்களின் ஏற்பட்ட வாரிசு உரிமைப் போட்டி முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் தென் மாநிலங்களில் ஒருபுறம் வெள்ளை இறையும் மறுபுறம் அவர்களோடு கைகோர்த்து நிற்கும் முகலாய அடிமை வம்சத்தினரின் படைகளையும் எதிர்கொள்ள வேண்டிய துரதிஷ்ட நிலை மீண்டும் தலை தூக்கியது. இந்நிலையை எல்லாம் முன்கூட்டியே கணித்ததால் தான் செல்லமுத்து சேதுபதி மன்னரால் தன் காலத்திற்குப் பிறகு தன்னுடைய ராமநாதபுரம் சமஸ்தானம் பாதுகாக்கவும் சுற்றுப்புறத்தில் இருக்கும் இதர இந்து மன்னர்களுக்கும் ஆதரவாக இருக்கும் வகையிலும் தன் மகளை வீரம் செறிந்த பேரணங்காக வளர்த்தெடுத்திருந்தார்.

தனது குடும்ப பாரம்பரியம் தனது ராஜ்ஜியத்தின் பெருமை கடந்து தனது தனிப்பட்ட பேரழகு சர்வ வல்லமை மிக்க ஆளுமை காரணமாக வேலு நாச்சியாரின் புகழ் தென்தமிழகம் முழுவதிலும் பரவலாக பரவி இருந்தது .அவரை மணந்து கொள்ள மன்னர்கள் முதல் பாளையக்காரர்கள் வரை பலரும் போட்டியிட்டு காத்திருந்தனர். ஆனால் ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியும் தன் போலவே முகலாயர்களையும் வெள்ளையர்களையும் துணிச்சலோடு எதிர்ப்பதும் தேசத்தின் விடுதலை ஹிந்துஸ்தானத்தின் தர்மத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் போகக் கூடியவராக இருந்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதன் சேதுபதி யாருக்கு தனது மகளை மணம் முடித்து வைக்க விரும்பினார். இந்த திருமணத்தின் மூலம் ஹிந்துஸ்தானத்தின் தேசியமும் தெய்வீகமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முயற்சி வேலுநாச்சியார் முத்து வடுக நாதர் திருமணத்தில் வெற்றி அடைந்தது.

இதன் மூலம் உயர்ந்த எண்ணம் கொண்ட தென் தமிழகத்தின் இரண்டு அரச குடும்பங்கள் ஒன்றிணைவதோடு இரண்டு நாடுகளும் பரஸ்பர புரிதலும் பாதுகாப்பும் அதன் மூலம் நீண்ட காலத்திற்கு இரண்டு சமஸ்தானங்களும் அந்நியர்களின் படையெடுப்பு ஆக்கிரமிப்புகளை தடுத்து தேசமும் மக்களும் பாதுகாக்கப்பட முடியும் என்றும் ராமநாதபுரம் மன்னர் கணித்திருந்தார் ‌அதன் அடிப்படையில் தான் சிவகங்கை சீமையின் மன்னரான முத்து வடுகநாத சேதுபதிக்கு தன் மகள் வேலு நாச்சியாரை மனைவியாக்கி இரண்டு சமஸ்தானங்களையும் வலுவாக ஒரு புரிதலோடு ஒன்றிணைத்து கொள்ளையடிக்க வந்த வெள்ளை எனக்கும் அவனுக்கு துணையாக வந்த ஆக்கிரமிப்பு மனோ நிலையில் இருந்த முகலாயப் படைகளுக்கும் சிம்ம சொப்பனமாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை சீமைகளை கட்டமைத்தார்.

( ஒருபுறம் தனது தந்தை செல்லமுத்து சேதுபதி யாரின் சரியான வழிகாட்டுதல் மறுபுறம் தனது கணவர் முத்து வடுக நாதரின் அப்பழுக்கற்ற விடுதலை உணர்வு இரண்டும் வேலுநாச்சியாரை மென்மேலும் வீரத்திலும் ஆளுமையிலும் வளர்த்தெடுத்தது. தேர்ந்த மதி நுட்பமும் துல்லியமான யுத்த கள வியூகமும் வகுப்பதில் வல்லவராக மிளிர்ந்த வேலு நாச்சியாரின் வியூகத்தால் பல்வேறு யுத்தங்களில் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதன் சேதுபதியார் வெற்றிகளை குவித்தார். முத்து வடுக நாத ரோடு பல நேரங்களில் யுத்த களத்திலும் வேலு நாச்சியார் வாள் சுழற்றி இருக்கிறார் .பல்வேறு யுத்த களங்களில் யுத்த வியூகங்களை வகுப்பதும் அவசரக்காளர் படைகளை நிர்வகிப்பது என்று மன்னருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு பங்களிப்புகளை வழங்கி இருக்கிறார். அவ்வகையில் ராமநாதபுரம் – சிவகங்கை சமஸ்தானம் என்ற இரு பெரும் சமஸ்தானங்களின் நம்பிக்கை ஒளியாகவும் உறவு பாலமாகவும் வீரமங்கை வேலு நாச்சியார் திகழ்ந்திருக்கிறார். ஒரு பெண் நினைத்தால் இரண்டு தேசங்களை எல்லை கோடுகளை எல்லாம் வெறும் சம்பிரதாயமாக மாற்றி தேசம் கடந்த நேசத்தை உருவாக்க முடியும் என்பதை சாதித்துக் காட்டிய சாதனைப் பெண் வீரமங்கை வேலு நாச்சியார் .அவரின் முயற்சிப்படியே இரண்டு சமஸ்தானங்கள் எல்லை கோடுகளைக் கடந்து தேசிய தெய்வீக உணர்வில் ஒன்று பட்டு அந்நியர்களை எதிர்க்க துணிந்து களம் நின்றது. )

1752 ல் ஆற்காட்டு நவாப் வாரிசு உரிமை உச்சகட்டமாக இருந்தது. இதில் போட்டியாளராக இருந்த சந்தாகிப் முகமது அலி இருவரிடையே ஏற்பட்ட மோதலில் சந்தாகிப் கொல்லப்பட்டார். முகமது அலி ஆற்காட்டு நவாப்பாக தன்னை முடி சூட்டிக்கொண்டான். ஆற்காட்டு நவாப்பாக முஹம்மத் அலி அரியணை அமர்ந்தாலும் அவன் வெறும் கைப்பாவையாகவே இருந்தான். அவனை பின்னணியில் இருந்து இயக்கியது முழுவதுமாக வெள்ளையர்களின் கூடாரமே. ஆங்கிலேயர்களின் கொத்தடிமை போல பெயருக்கு பதவியில் இருந்த காரணத்தால் முகமது அலிக்கு ஆற்காடு சமஸ்தானம் வெளியே தென் தமிழகத்தின் முழு வரி வசூலிக்கும் உரிமையை பிரிட்டிஷ அரசு முகமது அலியிடம் ஒப்படைத்தது. ஆனால் ஹிந்துஸ்தானத்திற்கு கொள்ளையடிக்க வந்து ஆக்கிரமித்து அரசாளத் துணிந்த முகலாயப் படைகளையும் வியாபாரம் செய்ய வந்து இங்கு தனது காலணி ஆதிக்கத்தை நிறுவிய பிரிட்டிஷ் அரசுக்கும் கொஞ்சமும் அஞ்சாமல் தங்களது தேசத்தை தன்மானத்தோடும் சுய கௌரவத்தோடும் கட்டிக்காப்பதில் கடுமை காட்டினார்கள் தென் தமிழகத்தில் இருந்த பாளையக்காரர்கள். அவர்கள் இந்த முகமது அலி அவரின் பின்னணியில் இருக்கும் ஆங்கிலேயர் படைகள் பற்றி சிறிதும் அச்சம் கொள்ளவில்லை. மாறாக எந்த விலை கொடுத்தேனும் தங்களின் தேசத்தின் விடுதலையை இறையாண்மையை தர்மத்தை பாதுகாக்க வேண்டும் என்பதில் மட்டுமே முனைப்பு காட்டினார்கள்.

வேலு நாச்சியார் முத்து வடுக நாத சேதுபதி தம்பதியருக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவர்களின் அரச நிர்வாகம் அந்நிய படை எதிர்ப்புக்கு உதவியாக சிவகங்கை பிரதானி தாண்டவராயப் பிள்ளை படைத்தளபதி தளவாய் பெரிய மருது தீரன் சின்ன மருது உள்ளிட்டவர்கள் உதவியாக இருந்தார்கள். சில காலங்கள் தொடர்ச்சியான யுத்தத்தில் மன்னர் முத்து வடுகநாதர் மரணித்த பிறகு வேலு நாச்சியார் களம் புகுந்து அந்நியரை எதிர்த்து படை நடத்துகிறார். ஆனாலும் நவீன துப்பாக்கிகள் பீரங்கிகள் என்று பெரும் படையோடு இருந்த பிரிட்டிஷ் மற்றும் முகலாயப் படைகளை எதிர் கொள்வதில் பின்னடைவு ஏற்பட்டதில் வேலு நாச்சியாரின் படைகள் வீழ்ந்தது . நாடு நகரம் இழந்த வேலு நாச்சியார் சரியான காலம் வரும் வரை மறைந்து வாழும் கட்டாயம் வந்தது. திண்டுக்கல் சமஸ்தானத்தில் அடைக்கலம் புகுந்தார். அங்கு விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கரின் விருந்தோம்பலும் பாதுகாப்பிலும் இருந்தாலும் தனது உயிரினும் மேலான இராமநாதபுரம் சிவகங்கை சமஸ்தானம் உசேன் நகரமாக மாறியது வேலு நாச்சியாரை உயிரோடு தின்றது. எப்பாடுபட்டேனும் தனது சமஸ்தானத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் உதவி கோரி இருந்தார். பன்மொழிப் புலமை பெற்றிருந்த வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலியிடம் நல்ல மரியாதை இருந்தது. அதன் அடிப்படையில் அவரின் உதவி கிடைத்தால் ஆற்காட்டு நவாப் படைகளையும் ஆங்கிலேய படைகளையும் வீழ்த்தி தனது சமஸ்தானத்தை மீட்டெடுத்து விட முடியும் என்று நம்பி ஹைதர் அலியின் உதவிக்காக காத்திருந்தார். விருப்பாச்சி பாளையத்தில் தன்னை வந்து சந்தித்த தன்னுடைய பிரதானி தாண்டவராய பிள்ளை ஹைதர் அலியின் சூழலும் தற்போதைய அரசியல் சூழலும் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை எடுத்துரைத்தார். மேலும் சில காலம் காத்திருந்து ஹைதர் அலியிடம் நேருக்கு நேராக ஆங்கில படைகள் போருக்கு நிற்கும்போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாங்களும் அதிரடியாக தாக்குதலை நடத்தினால் நிச்சயம் சிவகங்கை சீமையை மீட்டு விட முடியும். ஆங்கிலேயர்களின் கவனம் முழுவதும் ஹைதர் அலியின் மீதும் மைசூர் சமஸ்தானத்தின் மீதும் திரும்பி விட்டால் தங்களின் வெற்றி எளிதாகும் என்று வேலு நாச்சியாருக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தார். ஆனால் அவ்வளவு காலம் தாமதிக்க விரும்பாத வேலு நாச்சியார் நாள்கடத்திப் போகாமல் கூடிய விரைவில் தனது சமஸ்தானத்தை அந்நிய பிடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்போடு தயாரானார்.


Share it if you like it