ஐயோ! போதும்டா சாமி: தி.க. தலைவரின் குபீர் கிளப்பும் ஆய்வு புத்தகம்!

ஐயோ! போதும்டா சாமி: தி.க. தலைவரின் குபீர் கிளப்பும் ஆய்வு புத்தகம்!

Share it if you like it

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை ஸ்காட்லாந்த் நாட்டை சேர்ந்த பல்கலைகழகம் ஆய்வு நடத்தி வெகுவாக பாராட்டி இருப்பதாக மற்றொரு யுனெஸ்கோ கதையை அள்ளி விட்டு இருக்கிறார் கீ.வீரமணி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 – ஆன் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர், பதவியேற்ற பின்பு கழக கண்மணிகள், கழக முன்னோடிகள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் செய்து வரும் அட்ராசிட்டி தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து, தி.மு.க. கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் செய்து வரும் அட்டூழியங்கள், அராஜகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு இன்று வரை சரியான முறையில் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், திராவிட கழக தலைவர் வீரமணி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அவரது பேச்சு அமைந்து இருக்கிறது. இதுகுறித்து, அவர் பேசிய காணொளியில் கூறியதாவது;

திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை குறித்து ஸ்காட்லாந்த் நாட்டை சேர்ந்த பேராசிரியர் எடின் பெரோ என்பவர் ஆய்வு செய்து இருக்கிறார். அதனை மையமாக வைத்து ஆய்வு புத்தகம் ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். அதில், என்னென்ன உறுதி மொழிகளை தி.மு.க. வழங்கியது. அவற்றில், எதனை எல்லாம் தி.மு.க. அரசு நிறைவேற்றி இருக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி, உலகிலேயே ஒரு இயக்கத்தின் தேர்தல் அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருப்பது திராவிட மாடல் ஆட்சியை தவிர வேறு எந்த ஆட்சிக்கும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it