ஹிந்துக்களின் சடங்கு சம்பிரதாயங்களை கிண்டல் செய்பவர் வீரமணி. இவர், எடைக்கு எடை துலாபாரத்தின் மூலம் பணம் பெற்றது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
திராவிடர் கழகம் தீவிர இறைமறுப்பு கொண்ட இயக்கம் என்பதை அனைவரும் நன்கு அறிவர். அந்த வகையில், அதன் நிறுவனர் ஈ.வெ.ரா.வில் தொடங்கி தற்போதைய தலைவர் வீரமணி வரை கடவுள் மறுப்பை மையமாக வைத்து தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், திருப்பத்தூரில் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணியின் எடைக்கு நிகராக அந்த இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் பணம் வழங்கி இருக்கின்றனர். திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலந்துரையாடல் மற்றும் விடுதலை நாளிதழுக்கு சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ரூ.10 மற்றும் ரூ.20 கட்டு என சுமார் இரண்டு லட்சத்து பதினைந்து ரூபாய் கீ. வீரமணியின் எடைக்கு நிகராக வழங்கப்பட்டது.
துலாபாரம் ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால், பகுத்தறிவு பேசும் வீரமணி போன்றவர்கள் துலாபாரத்தில் அமர்ந்து தான் சந்தா நிதியினை பெற வேண்டுமா? இதுதான் பகுத்தறிவா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதில், கொடுமை என்னவென்றால், தி.க.வை சேர்ந்த தோழர் ஒருவர் பணம் அதிகம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கீ.வீரமணி அமர்ந்து இருக்கும் தராசு மேல் எழும்பாத வண்ணம் சிறந்த முறையில் முட்டு கொடுத்த சம்பவம் தான் ஹைலைட் என்பது குறிப்பித்தக்கது. ஓ இதுதான் திராவிட பக்தியா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.